தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha: “வாழ்க்கை ஒரு வட்டம் தான்”!கில்லி ரீ-ரிலீஸ் குறித்து த்ரிஷா வெளியிட்ட ரியாக்‌ஷன்

Trisha: “வாழ்க்கை ஒரு வட்டம் தான்”!கில்லி ரீ-ரிலீஸ் குறித்து த்ரிஷா வெளியிட்ட ரியாக்‌ஷன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 21, 2024 05:23 PM IST

கில்லி படத்தில் தான் தளபதி விஜய் - த்ரிஷா முதல் முறையாக ஜோடியாக இணைந்து நடித்தனர். இந்த படம் த்ரிஷாவின் சினிமா கேரியரில் முக்கியத்துவமாந படமாக இருந்தது.

கில்லி படத்தில் விஜய் - த்ரிஷா
கில்லி படத்தில் விஜய் - த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து கில்லி ரீ-ரிலீஸ் குறித்து நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில், கில்லி பட புகைப்படங்கள், கில்லி படத்தின் காட்சியில் தனது நடன காட்சி வரும்போது, ரசிகர்கள்கள் வைப் ஏத்தும் விதமாக திரையரங்கில் டான்ஸ் ஆடிய காட்சியை பகிர்ந்து, "வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு இதன் மூலம் தெரியுது. முதல் நாள் முதல் காட்சிக்காக எழுந்து பிளாக்பஸ்டர் வைப் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. 2004 முதல் 2024 வரை" என ஹார்ட் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷாவுக்கு திருப்புமுனை

த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படமாக கில்லி இருந்தது. இந்த படத்தின் திரைக்கதையே தனலட்சுமி என்ற அவரது கதாபாத்திரத்தை சுற்றியே அமைந்திருக்கும்.

அத்துடன் படத்தில் இடம்பிடித்திருக்கும் எவர்க்ரீன் குத்துப்பாடலன அப்படி போடு பாடலில் த்ரிஷா, விஜய்யின் ஆட்டம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் ஆட வைக்கும் விதமாக இருக்கும்.

வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், அவர் பேசும் ஹைய் செல்லம் என்ற டயலாக் மிகவும் பிரபலமானது. படத்தில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் விதமாக இருந்தன.

கில்லி ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்

கில்லி படம் வெளியாகி கடந்த வாரம் தான் 20 ஆண்டுகள் ஆகியிருந்தது. இதையடுத்து அதை கொண்டாடும் விதமாக படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் படம் வெளியிடப்பட்டது.

பிரான்ஸ். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் கில்லி ரீ-ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

 

ரீமேக் படமான கில்லி

தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் 2003இல் வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி. தெலுங்கை விட தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான கில்லி, விஜய்யின் சினிமா கேரியரில் மிகப் பெரிய ஹிட் படமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் தான் விஜய் - த்ரிஷா ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்தனர்.

ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை

கில்லி உலகளாவிய முன் பதிவு விற்பனையில் சுமார் ரூ. 3 கோடி சம்பாதித்து இருந்தது. இதையடுத்து முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கணிக்கப்பட்டது. தற்போது எதிர்பார்த்த வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் வாரத்தில் புதிததாக வேறு எந்த பெரிய படமும் ரீலசாக போவதில்லை என்பதால் கில்லி திரையரங்கில் இன்னும் சில நாள்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும் எனவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்