தமிழ் சினிமா ரீவைண்ட்: த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.. மே 16 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
மே 16ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் எவர்க்ரீன் கிளாசிக் படம், த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களை பார்க்கலாம்.

மே 16, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் த்ரிஷா அறிமுகமான லேசா லேசா, ஸ்ரீகாந்த் நடித்த பார்த்திபன் கனவு, சிவாஜி கணேசனின் எவர்க்ரீன் கிளாசிக் படமான வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
லேசா லேசா
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஷ்யாம், த்ரிஷா, விவேக் உள்பட பலர் நடித்து ரொமாண்டிக் படமாக உருவாகி 2003இல் ரிலீசான படம் லேசா லேசா. படத்தில் மாதவன் திருப்புமுனை தரும் விதமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாடலிங்கில் இருந்த த்ரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படமாக லேசா லேசா அமைந்திருந்தபோதிலும், அவரது முதல் படமாக மெளனம் பேசியதே வெளியானது. அதன் பிறகே லேசா லேசா ரிலீசானது.
மலையாள ஹிட் படமான சம்மர் இன் பெத்தல்கேம் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் படத்தின் மேக்கிங், காட்சியமைப்புகள் கதாபாத்திரங்களில் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹி்டடானதுடன், பாடல்களின் காட்சியமைப்புகளும் கவரும் விதமாக அமைந்தன