Trisha on AV Raju: அநாகரீக பேச்சு.. வரிசை கட்டிய கண்டனங்கள்.. அதிமுக ராஜூ மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த த்ரிஷா!
நடிகை த்ரிஷா தற்போது அவர் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

அதிமுக முன்னாள் பிரமுகரான ஏ.வி.ராஜூ அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூர் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.
அதைப்பற்றி பேசும் போது அவர் அதில் நடிகை த்ரிஷாவையும் தொடர்பு படுத்தி பேசினார். அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து அவர் மன்னிப்புக்கோரினார்.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா தற்போது அவர் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது தொடர்பான வக்கீல் நோட்டீசை அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், அந்த நோட்டீஸில் தனக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட சில மீடியாக்களை குறிப்பிட்டு அவை மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வக்கீல் நோட்டீஸில், “ தன்னுடைய மனுதாரருக்கு எதிராக பேசும் கருத்துக்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். தன்னுடைய மனு தாரருக்கு எதிராக பதிவிடப்பட்ட செய்திகளை, வீடியோக்களை நீக்க வேண்டும். அதே போல இந்த வக்கீல் நோட்டீசை பெற்ற 24 மணி நேரத்திற்குள் எங்களுடைய கட்சிக்காரரருக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட காரணத்திற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோர வேண்டும்.
அதனை நாளொன்றுக்கு 5 லட்சம் பிரதிகளை அச்சடிக்கும் ஆங்கில செய்தி தாளில் வெளியிடவேண்டும். புகாரை தெரிவிக்க எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ, அதே அளவுக்கு மன்னிப்பை வெளியிடுவதற்கும் நீங்கள்முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்