ஓடிடியில் டாப் வரிசையில் இருக்கும் தமிழ் படங்கள்! தொடர் விடுமுறையை கழிக்க என்ன படம் பார்க்கலாம்?
தமிழ்நாட்டில் இந்த வாரம் தொடர் விடுமுறை வாரமாக இருக்கிறது. நாளை வரை நீளும் இந்த விடுமுறையை வீட்டில் இருந்தே சிறப்பாக கழிக்கலாம். அதற்கு தான் ஓடிடி தளங்களில் தற்போது வெளியான தமிழ் படங்கள் பல உள்ளன. அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

சமீபகாலமாக ஓடிடியின் பயன்பாடு மக்களிடத்தில் அதிகரித்து வந்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா நோய் தொற்று என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு கொரோனா நோய் தொற்றிற்கு பின்னரே மக்கள் ஓடிடி தளத்தை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இந்த சமயத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் மீண்டும் ஓடிடியில் வெளியாகும் போது மக்களிடத்தில் அதற்கு அதிக வரவேற்பு வருவதும் வழக்கமாகிவிட்டது. திரையரங்கில் வெளியாகி ஓடாத ஒரு படம் கூட ஓடிடியில் வெளியான பின்னர் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களும் உள்ளன பல வலைத் தொடர்களும் வெளிவந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஓடிடி தலங்களில் வெளிவரும் வலைத்தொடர்கள் மற்றும் படங்களை மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். பிரதான பயன்பாடாக மாறிய ஓடிடி தளத்தில் பல நூறு கணக்கான தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.
ஓடிடியில் தமிழ் படங்கள்
உலக அளவில் பயன்படுத்தும் ஓடிடி தளங்களிலும் இந்தியாவில் பயன்படுத்தும் ஓடிடி தளங்களிலும் என பலவிதமான ஓடிடிகள் உள்ளன. இந்த நிலையில் இந்த வாரம் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதிலும் சில படங்கள் டாப் வரிசையிலும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த வாரம் தொடர் விடுமுறையாக இருந்து வருகிறது. பலருக்கு நாளை வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை கழிப்பதற்கு சிலர் தியேட்டர்களுக்கு சென்று வருவார்கள். ஆனால் தியேட்டர்களுக்கு செல்ல முடியாதவர்கள், தியேட்டர்களுக்கு செல்ல விரும்பாதவர்கள் பலர் வீட்டில் இருந்தே புதிய படங்களை பார்க்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக இந்த வாரத்தில் வெளியான சில புதிய படங்களை நீங்கள் வீட்டில் இருந்தே கண்டு களிக்கலாம். முதன்மையான டாப் வரிசையில் இருக்கும் தமிழ் படங்களை இங்கு காண்போம்.
எந்த படம் பார்க்கலாம்
உலக அளவில் பிரபலமான ஓடிடி தளமாக இருந்து வரும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இரு தினங்களுக்கு முன் அடல்ட் காமெடி படமான பெருசு படம் வெளியாகியுள்ளது. வயிறு வலிக்க சிரித்து பார்த்து மகிழ இது சிறந்த படமாக இருக்கிறது. மேலும் ஒரு வாரத்திற்கு முன் வெளியான டெஸ்ட் படமும் சிறந்த படமாக உள்ளது. மேலும் இந்தி வரலாற்று படமான சாவா தமிழ் டப்பிங்கிலும் ஸ்ட்ரீம் ஆகிறது. அமேசான் ஓடிடி தளத்தில் நடிகர் ரியோ நடிப்பில் வந்த ஸ்வீட்ஹார்ட் படம் வந்துள்ளது. மேலும் ஜி5 தளத்தில் கடந்த மாதம் வெளியான கிங்க்ஸ்டன் படமும் வெளியாகி உள்ளது.

டாபிக்ஸ்