Vijay: தியேட்டரில் மட்டும் இல்ல.. டிவிலேயும் இவர் தான்.. 2024ல் முதல் இடத்தில் மாஸ் காட்டும் விஜய்
Vijay: திருப்பாச்சி படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த ஆண்டில், 12. 04 ரேட்டிங் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

திருப்பாச்சி
இயக்குநர் பேரரசு இயக்கத்தில், நடிகர் விஜய் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் திருப்பாச்சி. 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களில் விஜய்யுடன் தொடர்ந்து பணியாற்றினார், பேரரசு.
திருப்பாச்சி படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த ஆண்டில், 12. 04 ரேட்டிங் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
பைரவா
பைரவா (விஜய்) ஒரு தனியார் வங்கியில் வசூல் முகவராக நடிக்கிறார். அவர் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன், அவர் மலர் விழியை (கீர்த்தி சுரேஷ்) காதலித்த பிறகு அவரது வாழ்க்கை மாறுகிறது. இந்த திரைப்படம் கல்வி மாஃபியாவை வெளிச்சம் போட்டுக் காட்ட முயற்சிக்கிறது, மேலும் அவர் வில்லனான பிகே (ஜெகபதி பாபு) உடனான சண்டை கதையின் மையக்கருவாக அமைகிறது.
பைரவா படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த ஆண்டில்,11 . 74 ரேட்டிங் பெற்று இரண்வாது இடத்தில் உள்ளது.
ருத்ரன்
நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ருத்ரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். எமோஷன், ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், அம்மா சென்டிமென்ட் என எல்லாம் இருக்கும் கமர்ஷியல் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்.
ருத்ரன் படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த ஆண்டில்,11 . 13 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
சண்டக்கோழி 2
சண்டக்கோழி படத்தை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சண்டக்கோழி 2 படம் வெளியானது. இதன் தொடர்ச்சியில் விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் மேலும் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஷாலின் ஹோம் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சண்டக்கோழி 2 படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த ஆண்டில்,11 . 12 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜில்லா
விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ஜில்லா'. இப்படத்தை ஆர்.டி. நேசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் காஜல் அகர்வால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்கியராஜ், மகத், நிவேதா தாமஸ், சம்பத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தாா்.
ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்துவது போன்ற கதையை மையமாக வைத்து 'ஜில்லா'வை உருவாக்கி இருந்தாா் இயக்குநர் நேசன். விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.
கம்பீர ரௌடி சிவனாக மோகன்லாலின் அசத்தல் நடிப்பு கவனம் ஈர்த்தது. வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருந்தது. இருவருமே ஆட்டம் போட்டு அசத்தி இருப்பாா்கள்.
சண்டக்கோழி 2 படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த ஆண்டில்,10 . 98 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
