விஜய்யை முந்திய சிவகார்த்தியேன்.. 2024 ஆம் ஆண்டில் கேரள பாக்ஸ் ஆபிஸை அதிர விட்ட டாப் 5 கோலிவுட் படங்கள்!
2024 ஆம் ஆண்டில் கேரள பாக்ஸ் ஆபிஸில் அதிகமாக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் குறித்த தொகுப்பை இதில் பார்க்கலாம்.
வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் லால் சலாம் மற்றும் வேட்டையன். லால் சலாம் பெரிய தோல்வியை சந்தித்தாலும், இந்த வருடம் வேட்டையன் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இப்படம் அக்டோபர் மாதம் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ஞானவேல் இயக்கி உள்ளார். கேரள பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி இப்படம், 16.8 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
அமரன்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடித்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட அமரன் படம் தீபாவளியன்று வெளியானது. கேரள பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி இப்படம், 13.85 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விஜய் நடித்த இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தனர். இந்த படம் செப்டம்பரில் விநாயக சதுர்த்தி அன்று வெளியானது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்தது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் 8 ஆம் இடத்தில் உள்ளது. கேரள பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி இப்படம், 13.5 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் கேரள பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி இப்படம்,7.9 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ராயன்
2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் ராயனும் ஒன்று. இப்படத்தை தனுஷ் நடித்து, இயக்கினார். ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது. இப்படம் ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியது, உலகளவில் ரூ.160 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. கேரள பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி இப்படம், 6.15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.