Top Cinema News: சிம்பு படங்கள் ரீ-ரிலீஸ்.. கார்த்தியின் விடியோ.. பிரகாஷ்ராஜ் புகார்.. இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: இரட்டை குழந்தை பிறந்ததை அறிவித்த சினேகன் - கன்னிகா தம்பதி, கார்த்தியின் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த விழிப்புணர்வு விடியோ, பிரகாஷ் ராஜ் புகார், சிம்புவின் இரண்டு படங்கள் ரீ-ரிலீஸ் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியின் கடைசி வெள்ளிக்கிழமையான நாளை (ஜனவரி 31) ராஜ பீமா, ரிங் ரிங் என இரண்டு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. அத்துடன் இந்த மாதத்தில் வெளியான படங்களில் விஷாலின் மதகஜராஜா தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே தமிழ் சினிமாவின் இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.
1.இரட்டை குழந்தை பிறந்ததை அறிவித்த ஸ்டார் ஜோடி
தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடிகளாக இருந்து வரும் கவிஞர் சினேகன் - நடிகை கன்னிகா ரவி தங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சினேகன் பகிர்ந்திருக்கும் பதிவில்,
"இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற"... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது... தாயே எந்தன் மகளாகவும்.. மகளே எந்தன் தாயாகவும்... இரு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள்... இதயமும்,மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது... உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள். என்றும் அன்புடன் சினேகன், கன்னிகா சினேகன்" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.