Top Cinema News: தமன்னாவை ஆன்டி என அழைத்த நடிகை.. 13 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: தமன்னாவை ஆன்டி என அழைத்த நடிகை, 13 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம், கண் பார்வை இழந்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

பொங்கலுக்கு ரிலீஸான படங்கள் கடந்த 10ஆம் தேதியில் இருந்து இரண்டு வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரிமித்திருந்தன. இதையடுத்து இந்த மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நாளை பாட்டில் ராதா, குடும்பஸ்தன், வல்லான், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், குழந்தைகள் முன்னேற்ற கழகம், பூர்வீகம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
தமன்னாவை ஆன்டி என அழைத்த நடிகை
பாலிவுட் படமான ஆசாத் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை தமன்னா. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டன்டன் ஹீரோய ராஷா ததானி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு பின் நடிகர், நடிகைகள் பேசிக்கொண்டிருந்த போது தன் அருகே நின்ற தமன்னாவை ஆன்டி என அழைத்துள்ளார் ராஷா ததானி. இதை கேட்டவுடன் சட்டென டென்ஷன் ஆன தமன்னா, ஆன்டியா என அவரது முதுகில் தட்டி அப்படி அழைக்கூடாது என்றார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கண் பார்வையை இழந்த ஆஸ்கர் விருது வென்ற நடிகை
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பாண்டுக்கு ஆலோசனை வழங்கும் பாட்டியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் இங்கிலாந்து நடிகை ஜுடி டென்ச். எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார். 91- வயதான இவர், தனது பார்வையை இழந்துள்ளார். "நான் என் கண் பார்வையை இழந்துவிட்டேன். யாரோ ஒருவர் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும். இல்லை என்றால் விழுந்துவிடுவேன். இதனால் படங்களில் நடிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்
பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்' என்ற படம் ஆஸ்கர் விருதில் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 97வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், இயக்கம், கதாநாயகி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சர்வதேச திரைப்படம், பாடல், துணை நடிகை, தழுவப்பட்ட திரைக்கதை, இசையமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் உள்பட 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
தெலுங்கில் ரிலீஸாகும் மதகஜராஜா
பொங்கல் ரிலீஸாக கடந்த 12ஆம் தேதி வெளியாக ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் படம் மதகஜராஜா. சுந்தர் சி - விஷால் கூட்டணியில் வெளியாகியிருக்கும் இந்த படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பை சத்ய கிருஷ்ணன் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடுகிறது.
ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்
நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் டெஸ்ட் கிரிக்கெட் மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் டெஸ்ட். தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். டெஸ்ட் படம் மூலம் பாடகி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படம் வரும் கோடை விடுமுறையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உருவாகிறது வின்னர் 2
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு நடிப்பில் 2003இல் வெளியான படம் வின்னர். படத்தில் வடிவேலு காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, மீம் மெட்டீரியலாகவும் இருந்து வருகிறது. இதையடுத்து இந்த கூட்டணி தற்போது 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது. விரைவில் வின்னர் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது
யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்துக்கு நோட்டீஸ்
மலையாள நடிகை கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்துக்கு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு பணிகள் கர்நாடகாவின் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பின் போது பெங்களுருவில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கர்நாடக அரசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கும்பமேளா அழகிக்கு தேடி வந்த பாலிவுட் வாய்ப்பு
கும்பமேளா நிகழ்வுக்காக ஊசி, பாசி மற்றும் ருத்ராட்சை மாலை விற்க வந்த இந்தூரை சேர்ந்த மோனாலிசா தனது கண்களாலும், டஸ்கி அழகாலும் அனைவரையும் கொள்ளை கொண்டு இணையத்தில் வைரலானார்.
இதையடுத்து பிரபல திரைப்பட இயக்குநரான சனோஜ் மிஸ்ரா, கும்பமேளா வைரல் பெண் மோனாலிசாவுக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "கடந்த சில நாள்களாக கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்சை மாலை விற்கும் இந்த பெண்ணின் விடியோக்களை பார்த்து வருகிறேன். தனது கண்களின் அழகால் வைரல் ஆகியுள்ளார். இந்த ஏழை பெண்ணுக்கு என படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க போகிறேன். உங்களின் கருத்து என்ன?" என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். . சனோஜ் மிஷ்ரா மோடி கா பரிவார் என்ற படத்தின் இயக்குநர் ஆவார்.
நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது
நயன்தாரா ஆவணப்படம் விவகாரத்தில் தனுஷ் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் இறுதிகட்ட விசாரணையில், நானும் ரெளடிதான் படத்தின் அணிந்திருக்கும் நயன்தாரா ஆடை வரை உரிமை உள்ளது என்று தனுஷ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
தெலுங்கு சினிமா சர்ச்சை இயக்குநருக்கு சிறை
தென் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ. 3.72 லட்சம் அபராதம் விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்