Top 10 Cinema : தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முதல் நயன்தாரா வாழ்க்கை வரலாற்று படம் வரை உள்ள இன்றைய கோலிவுட் அப்டேட்
கோலிவுட் சினிமாவில் இன்று நடந்த முக்கியத் தொகுப்பை இங்கு காணலாம்.

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்
தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில் நாளை சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன், ஜெயம் ரவி நடிப்பில் உருவான பிரதர், கவின் நடிப்பில் உருவான BLOODY BEGGAR, துல்கர் சல்மான் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
நயன்தாராவின் ஆவணப்படம்
நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து வந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. அதில் எப்படி இந்த இடத்திற்கு உயர்ந்தேன் என்று விளக்கும் நயன்தாராவின் பேட்டியும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டும் இல்லாமல் நயன்தாரா குறித்து மற்றவர்கள் பேசும் பேட்டிகளும் உள்ளது. அதோடு அவர்களது திருமண புகைப்படம் மற்றும் வீடியோவையும் ஆவணப்படத்தில் இணைத்து இருக்கிறார்கள் சமீபத்தில் இந்த ஆவணப் படத்தின் டிரைலர் வெளியானது அதில் நயன்தாரா தன்னை சாதாரண பெண் என்று கூறியிருந்தார். இந்த ஆவணப்படத்திற்கு நயன்தாரா : தி பேரி டேல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 18 நயன்தாராவின் பிறந்தநாள் அன்று இந்த OTT தளத்தில் வெளியாக உள்ளது.
அதிக திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தீபாவளியையொட்டி நாளை வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட அமரன் திரைப்படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதாக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த படமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.