Top 10 Cinema : மன்சூர் மகன் கைது விவகாரம்.. மன்னிப்பு கேட்கும் அஜித் ரசிகர்கள்.. செய்தியாளர்களை விரட்டி அடித்த நடிகர்!
ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள், மன்சூர் அலிகான் மகன் கைது விவகாரம்புதிதாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
மன்சூர் அலிகான் மகன் கைது விவகாரத்தில் புதிதாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல், புஷ்பா - 2' படம் வசூல் சாதனை, ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
மன்சூர் அலிகான் மகன் கைது விவகாரம் - புதிய தகவல்
புதிதாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல். டார்க் வெப், வி.பி.என் மூலமாக பாங்காங்கில் இருந்து ஓ.ஜி கஞ்சா ஆர்டர் செய்து, விமானம், கப்பல், கொரியர் மூலமாக சென்னைக்கு வரவழைப்பது தெரியவந்துள்ளது
'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது
காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் `என்னை இழுக்குதடி' சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள என்னை இழுக்குத பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவரை இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. இந்நிலையில், 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகர் விமல் நடித்த சார்
நடிகர் விமல் நடித்த சார் படம் தற்போது அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் பார்க்காத பலரும் தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
புஷ்பா - 2' படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.922 கோடி வசூலித்து சாதனை
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 5 நாள் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் 922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித் அறிக்கை
'தல' என அழைக்க வேண்டாம் என்றும் தனக்கு எந்தவொரு அடைமொழியும் வேண்டாம் என ஏற்கனவே அஜித் குமார் அறிவித்த நிலையில், சமீப காலமாக "கடவுளே அஜித்தே"ன்னு ரசிகர்கள் கோஷம் போட்டு வருவது தன்னை ரொம்பவே கஷ்டப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அஜித் அதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மன்னிப்புக் கேட்கும் ரசிகர்கள்
நடிகர் அஜித் குமார் அட்வைஸ் சொன்னவுடனே பல ரசிகர்கள் சாரி அஜித் இனிமேல் அப்படி கத்த மாட்டோம் என கமெண்ட் போட்டு மன்னிப்புக் கேட்டு வருகின்றனர். ஆனால், அதிலும் சில ரசிகர்கள் எங்களோட செலிபரேஷனே இதுமட்டும் தான் இதையும் தடுத்தா எப்படி என திருப்பி அஜித்தை பார்த்தே கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர் மோகன் பாபு
நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் மைக்கை பிடுங்கி நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளை அணைத்துகொண்ட ஜீவி பிரகாஷ்
தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜிவி பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவரின் குழந்தை மேடைக்கு வரவேண்டும் என்று சொல்ல, சைந்தவி பத்திரமாக ஜிவி பிரகாஷிடம் குழந்தையை அனுப்பி வைத்தார். மேலே வந்த குழந்தையை ஜிவி பிரகாஷ் பாதுகாப்பாக கட்டி அணைத்துக்கொண்டார்.
ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற அன்புமணி மகள்
பாமக கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இவரது முதல் படமான அலங்கு படத்தின் ட்ரைலரை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை சந்தித்து பாராட்டியுள்ளார்.
தங்கலான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக பல தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த தடைகள் அனைத்தும் விலகி நேற்று தங்கலான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டாபிக்ஸ்