ஷங்கரோட அந்தப் படம் வேணா அப்படி போயிருக்கலாம்.. ஆனா இது.. நடிகர் சொன்ன சீக்ரெட்..
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்த முக்கிய விஷயங்களை நடிகர் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.
ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தைபிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சாதனை செய்ய உள்ள ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடி தடத்தை பதித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவர் படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது, கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ஷங்கர் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிபடுத்திய நிலையில், தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முக்கிய விஷயங்கள் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
கலைக்கு பெயர் பெற்ற ஷங்கர்
ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீகாந்த், இயக்குநர் ஷங்கர் தனது கலைக்கு பெயர் பெற்றவர். அவர் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எங்களை மிகவும் வசதியாக வைத்திருந்தார். அவர் மிகவும் பொறுமையானவர். தனது படத்தில் நடிகர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். அத்துடன் அவரது சிந்தனையை நமக்குள் சரியாக செலுத்துவதால் எங்களுக்கும் அது சற்று சுலபமாக இருந்தது.
அசத்தும் எஸ்.ஜே.சூர்யா
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார், சரிபோதா சனிவாரத்தில் இருந்ததை விட கேம் சேஞ்சரில் அவரது பாத்திரம் சிறப்பாக இருக்கும். ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி என அனைவருடனும் எனக்கு காட்சிகள் உள்ளன. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அபாரம். அவரது கதாபாத்திரம் நகைச்சுவை, தந்திரம் மற்றும் கிண்டல் ஆகியவை மக்கள் மனதில் நிற்கும். இதுபோன்ற பல்துறை கதாபாத்திரங்களுடன் பணிபுரிவது ஒரு அற்புதமான அனுபவம்.
3 மணி நேரம் மேக்கப்
கேம் சேஞ்சர் படத்தில் நான் வயதான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இதற்காக தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மேக்கப் போட உட்கார வைக்க வேண்டும். நான் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியும் என்று நம்பினேன். ஷங்கர் சாருடன் பணிபுரிவது பலரின் கனவு. அவரது படத்தில் இதுபோன்ற குறிப்பிடத்தக்க பாத்திரம் எனக்கு கிடைத்து என் அதிர்ஷ்டம்.
நினைத்த அனைத்தும் இருக்கிறது
இப்போது வெளியாகும் பெரும்பாலான படங்களைப் போல கேம் சேஞ்சர் படமும் 2 பாகங்களைக் கொண்டிருக்குமா என பலரும் கேட்கின்றனர். இல்லை. இந்த படம் ஒரே ஒரு பாகத்தைத் தான் கொண்டிருக்கிறது என நினக்கிறேன். ஷங்கரின் சமீபத்திய படங்கள் ஏமாற்றம் அளித்திருக்கலாம், ஆனால் ஒரு இயக்குநராக அவர் ஒருபோதும் தோல்வியடைந்ததில்லை. இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் வலுவாக மக்கள் மனதில் இடம்பெறுவார் என்று நம்புகிறேன்.
அரசியல் மற்றும் பல திருப்பங்கள் உட்பட மக்கள் விரும்பும் அனைத்து வணிக கூறுகளும் இதில் உள்ளன. இது பெரிய ஹிட் தரும் என நம்புறேன்." எனக் கூறியுள்ளார். கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்