தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Today Marks The 67th Birthday Of Director Perarasu

HBD Perarasu: பாசப் படங்களின் கலைஞன்.. வெற்றி இயக்குனர் பேரரசு

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 08, 2024 06:45 AM IST

இயக்குனர் பேரரசுவின் 67வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பேரரசு பிறந்தநாள்
பேரரசு பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் 1967ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்துள்ளார். எட்டு வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னைக்கு புதிதாக வந்தவராக இருந்தாலும் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு அனைத்து ப்ரொடெக்ஷன் நிறுவனத்தையும் சுற்றி வந்துள்ளார். அதன் பின்னர் 16 வருடங்கள் கழித்து மொத்த தொழில் அனுபவத்தையும் கற்றுக் கொண்டார். இயக்குனர் ராமா நாராயணன் மற்றும் என் மகாராஜன் உள்ளிட்ட ரோடு உதவி இயக்குனராக பணியாற்றி தன் திறமைகளை சரியான முறையில் வளர்த்துக் கொண்டு தன்னை நெறிப்படுத்தினார்.

தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய் மூலம் தமிழ் சினிமாவில் பேரரசு இயக்குனராக அறிமுகமானார் இவருடைய முதல் திரைப்படம் திருப்பாச்சி. இது நடிகர் விஜய்யின் 40வது திரைப்படமாகும்.

ஒரு இயக்குனரை பலர் மத்தியில் அறிமுகப்படுத்துவது அவர்களுடைய முதல் பட வெற்றி தான் திருப்பாச்சி திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது சில திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேலாகவும், சில திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாகவும் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

திருப்பாச்சி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஓடு இயக்குனர் பேரரசு மீண்டும் இணைந்தார். அந்த திரைப்படத்திற்கு சிவகாசி என பெயரிடப்பட்டது தீபாவளி தினத்தன்று வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் பேரரசு மற்றும் விஜய்யின் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

விஜய்யை தொடர்ந்து ஏவிஎம் நிறுவனத்தோடு கூட்டணி அமைத்து அஜித்குமாரோடு பேரரசு இணைந்தார். திருப்பதி என பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து வெற்றியை ருசித்த பேரரசு விஜயகாந்துடன் சேர்ந்து தர்மபுரி என்ற திரைப்படத்தை இயற்றினார். இவருடைய ஸ்பெஷல் என்னவென்றால் இவருடைய திரைப்படத்திற்கு ஒவ்வொரு ஊரின் பெயரை தலைப்பாக வைப்பார்.

திரைப்படத்தின் அடித்தளமே பாசம் தான். குடும்ப பாசத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து திரைப்படங்களையும் வெற்றி படமாக மாற்றினார் பேரரசு. கடைசியாக மலையாளத்தில் சாம்ராஜ்யம் இரண்டு என்ற திரைப்படத்தை இயற்றினார் அதற்கு பிறகு இந்த திரைப்படமும் இவர் எடுக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.