MGR Marmayogi: முதல் நாயகன்.. காலத்தால் அழிக்க முடியாத மர்மயோகி என்ற காவியம்
மர்மயோகி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 73 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராக இருந்தார் எம்ஜிஆர். சினிமா மட்டுமல்லாது அரசியல் துறையிலும் தனது தடத்தை பதித்து கொடிகட்டி பறந்தார். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில படங்கள் இவரை மக்கள் மத்தியில் நாயகனாக அறியச் செய்தது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் மர்மயோகி.
முதல் முறை எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து வெளியான திரைப்படம் ராஜகுமாரி. அந்தத் திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ சாமி இயக்கினார். இந்த ராஜகுமாரி திரைப்படம் 1947 ஆம் ஆண்டு வெளியானது. எம்ஜிஆர் அதே இயக்குனரிடம் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் மர்மயோகி. தன்னைச் சுற்றி கதை நகர வேண்டும் என எம்ஜிஆர் கேட்டுக் கொண்டதால், இயக்குனர் சாமி பல நாவல்களை திரட்டி எழுதிய கதை தான் இந்த மர்மயோகி.
கதை
ஒரு நாட்டில் இருக்கக்கூடிய நடனக்காரி கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனைக்குள் நுழைந்து, மன்னரை தன் வசப்படுத்தி பின்னர் அவரை கொலை செய்து விட்டு ராணியாக அரியணை ஏறுகிறார். அதன் பின்னர் சமூக சீர்திருத்தவாதியாக பொதுநலவாதியாக கரிகாலன் என்ற ஒரு இளைஞன் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
நடனக்காரியாக இருக்கக்கூடிய ராணியின் தளபதியாக வீராங்கன் என்பவர் இருந்து வருகிறார். அவர் சீர்திருத்தவாதி கரிகாலனை காதல் செய்து ஏமாற்றுவதற்காக கலாவதி என்ற பெண்ணை அனுப்புகிறார். கரிகாலனை ஏமாற்றுவதற்காக சென்ற கலாவதி அவர் மீது காதல் கொள்கிறார்.
அனைத்து செயல்பாடுகளிலும் கரிகாலனை ஒரு ஆவி வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறது. அதன் பின்னர் இறுதிக்கட்டத்தில் கரிகாலனுக்கு உதவி செய்த ஆவி இறந்து போனதாக கூறப்படும் என கண்டறியப்படுகிறது.
அந்த அரசரின் மூத்த மகன் தான் இந்த சீர்திருத்தவாதியாக இருக்கக்கூடிய கரிகாலன், இளைய மகன் தளபதியாக இருக்கக்கூடிய வீராங்கன். கரிகாலனை மயக்க வந்த கலாவதி அரசரின் தளபதியின் மகள். இறுதியாக ராணியாக அமர்ந்திருக்கும் நடன காரியம் சதி வேலைகள் முடிவடைந்து அவர் இறந்து விடுகிறார். அனைவரும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.
இந்த திரைப்படத்தில் எம்ஜிஆரின் கதாபாத்திரத்தை வைத்து அனைத்து கதாபாத்திரங்களும் நகரும். அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் திரையரங்குகளில் கைத்தட்டல்களை பெற்றன. எம்ஜிஆரை கதாநாயகனாக மக்கள் மத்தியில் பதிய வைத்ததில் இந்த திரைப்படத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.
அப்போதே இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் ஒன்றும் இல்லை என பார்ப்பவர்கள் கூறினாலும், இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
காரணம் என்னவென்றால் கரிகாலனாக நடித்த எம்ஜிஆரை காண்பதற்காக அவரது அப்பா பேயாக வந்திருப்பார் அதற்காக இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்க கொடுத்துள்ளனர். கடைசியில் அவர் மன்னர் என்பது திரைப்படத்தில் இருந்தாலும், அவர் பேயாக வருவதைப் பொறுத்து இந்த சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த திரைப்படம் தான் தமிழ் மொழியில் முதலில் ஏ சான்றிதழ் வாங்கிய திரைப்படமாக விளங்கி வருகிறது.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 73 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் சிறப்பான தனித்துவத்தை பெற்ற படைப்புகளுக்கு எப்போதும் அழிவில்லை என்பதற்கு இந்த திரைப்படம் மற்றும் மிகப்பெரிய உதாரணமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்