தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dharma Yuddham: கதாநாயகனாக ஜொலித்த ரஜினிகாந்த்.. சுவாரசியமான திரைக்கதை.. உச்சம் சென்ற தர்மயுத்தம்

Dharma Yuddham: கதாநாயகனாக ஜொலித்த ரஜினிகாந்த்.. சுவாரசியமான திரைக்கதை.. உச்சம் சென்ற தர்மயுத்தம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 05:55 AM IST

45 years of Dharma Yuddham: இயக்குனர் சக்தி மூன்றாவது படத்தில் ரஜினிகாந்தை நாயகன் ஆக்கியது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். அதேபோல இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார். ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் மிக முக்கியமான படங்களாக தமிழ் சினிமாவில் அமைந்தன.

கதாநாயகனாக ஜொலித்த ரஜினிகாந்த்.. சுவாரசியமான திரைக்கதை.. உச்சம் சென்ற தர்மயுத்தம்
கதாநாயகனாக ஜொலித்த ரஜினிகாந்த்.. சுவாரசியமான திரைக்கதை.. உச்சம் சென்ற தர்மயுத்தம்

45 years of Dharma Yuddham: ஆரம்ப காலகட்டம் தொடங்கிய இன்று வரை நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வருகிறார். இந்த உழைப்பின் பயணமானது மிகப்பெரிய தூரமாகும். ஆரம்ப காலகட்டத்தில் இவர் கொடுத்த உழைப்புதான் இந்த அளவிற்கு முன்னேற்றத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. எத்தனையோ மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை நடிகர் ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

இன்றுவரை தமிழ் சினிமாவின் ஸ்டைல் மன்னனாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்ட திரைப்படங்களில் ஒவ்வொரு அசைவிலும் தனது ஸ்டைலை நடிகர் ரஜினிகாந்த் கொடுத்திருப்பார். அப்படிப்பட்ட வெற்றி திரைப்படங்களில் ஒன்றுதான் தர்மயுத்தம்.

இந்த திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒரு வலுவான கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டார். மாறுபட்ட கதைக்கோணங்களை எடுப்பதில் இயக்குனர் ஆர்.சி.சக்தி வல்லவர். நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராக இருந்த இவர் எத்தனையோ திரைப்படங்களை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளார்.

இரண்டு திரைப்படங்களில் கமல்ஹாசனை நாயகனாக நடிக்க வைத்து விட்டு இயக்குனர் சக்தி மூன்றாவது படத்தில் ரஜினிகாந்தை நாயகன் ஆக்கியது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். அதேபோல இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார். ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் மிக முக்கியமான திரைப்படங்களாக தமிழ் சினிமாவில் அமைந்தன.

ட்ரெண்டிங் செய்திகள்

கதை

மனிதர்களின் உடல் உறுப்புகளை பணத்திற்காக விற்கக்கூடிய ஒரு கும்பல் இடம் ரஜினிகாந்தின் தந்தை சிக்கிக் கொள்வார். அவரைக் கொன்று அவருடைய உடல் உறுப்புகளை விற்று விடுவார்கள். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் அவர்களை பழி வாங்குவார் இதுதான் திரைப்படத்தின் மைய கதையாகும்.

இந்த திரைப்படத்தில் காதல், அண்ணன் தங்கை பாசம் என அனைத்தும் கலந்து ஜனரஞ்சகமாக இருக்கும். பார்க்கக் கூடிய ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் சரியான அளவுகோலில் இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது திரைக்கதை தான்.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மூக்கு கண்ணாடி அனைத்து நடித்திருப்பார். இதுபோல ரஜினிகாந்தை ஒரு சில படங்களில் மட்டுமே பார்க்க முடியும். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இவர்கள் இருவருக்கும் ஆகாய கங்கை என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது இன்று வரை பலரது பிளே லிஸ்டில் இந்த பாடல் இருந்து வருகிறது.

அதேபோல அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு தங்க ரதத்தில் என்ற பாடல் மிகப்பெரிய தாக்கத்தை அந்த காலத்தில் ஏற்படுத்தியது. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். அவர் பாடினாலே அந்த பாடல் ஹிட் தான்.

இந்த இரண்டு பாடல்களிலும் ரஜினிகாந்த் காட்டும் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருக்கும் மக்களை கவரக்கூடிய அளவிற்கு இருக்கும். இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இந்த இரண்டு பாடல்களும் நின்று வருகின்றன. அப்படி என்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் திரைப்படத்திற்கு இசையமைத்தது இளையராஜா

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி இவர்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய காதல் காட்சிகள் அனைத்தும் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். அதற்குப் பிறகு தந்தைக்காக பழிவாங்க செல்லும் ரஜினிகாந்த்க்கு ஸ்ரீதேவி உதவக்கூடிய காட்சிகளும் மிகவும் அழகாக இருக்கும். இந்த திரைப்படத்தில் இருக்கக்கூடிய ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும்.

கதாநாயகனாக உருவெடுத்த ரஜினிகாந்த் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருப்பார். ரஜினிகாந்த் தமிழ் சினிமா பயணத்தில் இந்த திரைப்படம் என்றுமே தவிர்க்க முடியாத இடத்தை பெற்று இருக்கும். தர்மயுத்தம் என்ற பெயரை கேட்டாலே இன்றுவரை அனைவரும் கூறுவது ரஜினி படம் என்றுதான். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் சாகா வரத்தை பெற்று உள்ளது. இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 45 ஆண்டுகளாகின்றன. காலத்தால் அழிக்க முடியாத கலை படைப்புகளில் இதுவும் ஒன்று என்று கூறினால் அது மிகை ஆகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9