இறந்த பெண்ணை வைத்து விளையாட்டு.. அனைவரையும் சுழற்றிவிட்ட கும்பகோணம் கோபாலு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இறந்த பெண்ணை வைத்து விளையாட்டு.. அனைவரையும் சுழற்றிவிட்ட கும்பகோணம் கோபாலு

இறந்த பெண்ணை வைத்து விளையாட்டு.. அனைவரையும் சுழற்றிவிட்ட கும்பகோணம் கோபாலு

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 26, 2023 04:45 AM IST

Kumbakonam Gopalu: கும்பகோணம் கோபாலு திரைப்படம் இன்றுடன் வெளியாக 25 ஆண்டுகள் ஆகின்றன.

கும்பகோணம் கோபாலு
கும்பகோணம் கோபாலு

இந்த நகைச்சுவை அவ்வளவு எளிது கிடையாது. அதை ஒரு திரைப்படமாக எடுத்து வெற்றி பெறச் செய்வதென்பது அவ்வளவு கஷ்டமான விஷயம். அதை சரியான முறையில் கையாள தெரிந்த இயக்குனர்கள் சொற்பம் தான்.

அந்த வரிசையில் சென்டிமென்ட், நகைச்சுவை இரண்டையும் சரியான முறையில் கையாண்டு வெற்றித் திரைப்படங்களாக கொடுத்தவர் இயக்குனர் பாண்டியராஜன். இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி கன்னி ராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

ஆண்பாவம் என்ற நகைச்சுவை திரைப்படத்தை எடுத்து மிகப் பெரிய வெற்றி படமாக தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார். இவர் இயக்கும் படம் மட்டுமல்லாது இவர் பல இயக்குனர்களோடு சேர்ந்து பணியாற்றும் திரைப்படங்களும் சென்டிமென்ட் வித் காமெடி தான். தனது பாதையை சரியாக தேர்வு செய்து கொண்டார்.

அப்படி 1998 ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கும்பகோணம் கோபாலு. சீரியஸ் காமெடி என்ற அடித்தளத்தைக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை ஏமாற்றி வாழக்கூடிய ஒரு தந்திர காரர் கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் நடித்திருப்பார். அவருடைய பெயர் தான் இந்த திரைப்படத்தில் கோபால்.

இதய நோயால் இறந்து போன கௌரி என்ற பெண்ணை மருத்துவமனையில் கோபால் பார்க்கிறார். அவருடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கோபால் யோசிக்கிறார்.

அப்போது அவரிடம் இருந்து ஒரு டைரி கிடைக்கின்றது. அதைப் படித்துப் பார்க்கும் பொழுது அந்த இறந்து போன இளம் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பேருமே மிகப்பெரிய முதலாளி.

வெவ்வேறு காரணங்களுக்காக அந்த மூன்று பேருடன் உயிரிழந்த பெண் சம்பந்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக கூற வேண்டுமென்றால் அந்த மூன்று பேருடனும் இந்த பெண் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். இதனைப் படித்த கோபாலுக்கு இதன் மூலம் அந்த மூன்று பேரிடமும் பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணம் தோன்றுகிறது.

உடனே கோபால் அந்த மூன்று பேருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி அனுப்புகிறார். அந்த கடிதத்தில், உங்களால் எனக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அவருடைய பெயர் கணேஷ் என எழுப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இடை இடையே நகைச்சுவைகள் முழுமையாக இருந்தாலும். இறுதியில் மூன்று பேரும் கோபாலை சந்திக்க வருகிறார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு அனைத்தையும் உணர்த்துகிறார். இதோடு படம் நிறைவடைகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தது இளையராஜா. இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியான கௌரி கணேசா என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படமாக இன்று வரை இருந்து வருகிறது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜனின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கிய திரைப்படம் என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.