இந்த பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு பணம் கொடுத்தாராம்.. மனங்களை வென்ற பாடலாசிரியர் ஆலங்குடி சோமு!
ஆலங்குடி சோமு எழுதிய 200 பாடல்களுமே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர் பாடல்களை கொடுத்திருப்பார். இவருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932ஆம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்தவர் சோமு. ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.
திரையுலகில் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் அவரின் நண்பர் புரட்சிதாசன். தமிழ் திரையுலகில், 1960 முதல்1997 வரை 80 படங்களுக்கு 200 பாடல்கள் எழுதியுள்ளார். சின்னப்ப தேவரின் யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்’என்ற நகைச்சுவை பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல். இப்பாடலை எல் ஆர் ஈஸ்வரி, ராகவன் பாடியிருப்பார்கள்.
'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான், மலருக்குத் தென்றல் பகையானால், ஆடலுடன் பாடலை கேட்டு, துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கே.பாலசந்தரின் இயக்கத்தில், பத்தாம்பசலி என்ற படத்தையும், ஜெய்சங்கர் நடிப்பில், வரவேற்பு என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவருக்கு, 1973-74ம் ஆண்டில், தமிழக அரசின், 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது.
ஆலங்குடி சோமுவின் தம்பி தஞ்சாவூரில் மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவரை பார்ப்பதற்காக ஆலங்குடி சோமு தஞ்சாவூர் செல்கிறார். அப்பொழுது மருத்துவமனையில் பிணவறையில் நிறைய பேர் சுற்றி இருக்கிறார்கள். அதுவும் அழுது கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ஆலங்குடி சோமு தனது தம்பியிடம் என்ன ஆனது என்று விசாரிக்கிறார்.
200 பாடல்களுமே ஹிட்
அதற்கு ஆலங்குடி சோமு அவர்களின் தம்பி இந்த பிணவறையில் வரும் உடலை எல்லாம் எடுக்க நபர் ஒருவர் இருந்தான். அவன் இன்று இறந்துவிட்டார். அதனால் தான் மருத்துவமனையை சோகத்தில் உள்ளது என தம்பி கூறுகிறார். இது பாடலாசிரியர் ஆலங்குடி சோமுவின் மனதில் பதிந்து விட்டது இதற்கு ஏற்றார் போல இரவும் பகலும் என்ற படத்தில் பாடல் ஒன்று எழுத இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்பொழுது தான் பார்த்த அந்த காட்சியை வைத்து இவர் ஒரு பாடல் எழுதுகிறார்.
அந்தப் பாடல் தான் 'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்’ என்ற பாடல். இந்தப் பாடலை அசோகன் பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை ஆலங்குடி சோமு எழுதி இருக்கிறார். ஆனால் இந்த பாடலுக்கு தான் தத்துவ கவிஞர் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. ஆலங்குடி சோமு எழுதிய 200 பாடல்களுமே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர் பாடல்களை கொடுத்திருப்பார்.
அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்றுள்ள அட்டகாசமாக பாடலான
”தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்”
வீடு வாங்கும் அளவுக்கும் ஆலங்குடி சோமுக்கு பணம் கொடுத்தாரம்
இந்த பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கும் ஆலங்குடி சோமுக்கு பணம் கொடுத்தாரம். அவ்வளவு பிடித்ததாம் இந்த பாடல். இன்றும் தாய் என்றால் இப்பாடல் கண்டிப்பாக அனைவரின் மனதில் தோன்றும் முதல் பாடலாக இருக்கும்.இதுபோன்று இன்னும் பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். 1990 ஜூன் 6ஆல் பக்கவாதம் வந்து காலமானார். இவருக்கு இன்று பிறந்தநாள்.இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.
டாபிக்ஸ்