Y.G.Mahendran: 'காமெடியான சீரியஸ் நடிகர்' ஒய் ஜி எம் என்கிற ஒய் ஜி மகேந்திரன்!
இன்று 74 ஆண்டுகளை மட்டும் கடக்க வில்லை. கலை உலகில் பாலசந்தர் முதல் ஆரம்பித்து மூன்று தலைமுறை கடந்து இன்றைய தலைமுறை ரசிக்கும் ஆதிக்ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படம் வரை கலக்கி வருகிறார்.
மிகச்சிறந்த மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த குணச்சித்திர நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறன் கொண்ட அற்புதமான கலைஞனின் பிறந்த நாள் இன்று
பிறப்பு
சென்னை மாநிலத்தில் முதலில் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் என்ற பெயரில் நடத்தி வந்த நாடகங்களின் முன்னோடி மற்றும் இன்று பிரபலமாக திகழும் பத்ம சேஷாத்திரி பள்ளி நிறுவனங்களை உருவாக்கியவருமான ராஜலட்சுமி ஆகியோருக்கு மகனாக 1950 ஜனவரி 9 அன்று சென்னையில் பிறந்தார். எக்மோர் டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து விட்டு ஏ.சி. கல்லூரியில் வேதியியல் சார்ந்த பொறியியல் படிப்பையும் முடித்தார்.
கலை ஆர்வம்
சிறு வயதிலேயே பள்ளி மேடை நாடகங்களில் பங்கேற்றார். தனது 11 வயதில் தனது தந்தையின் நாடக குழுவின் மேடை நாடகங்களில் பங்கேற்றார். 1970 முதல் நாடகக் குழுவின் முழு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு நாடகங்கள் எழுதி இயக்கவும் ஆரம்பித்தார். சொல்ல வேண்டிய கதையை நகைச்சுவை கலந்து இயல்பான பேச்சு வழக்கில் நாடகங்களை அரங்கேற்றம் செய்ய அவரின் நாடகங்கள் பிரபலம் ஆனது.
இயக்குனர் பாலசந்தர் மகேந்திரன் நாடகம் பார்த்து விட்டு 1971 ல் தனது 'நவக்கிரகம்" என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த படத்தை தொடர்ந்து சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினி காந்த்,ஜெய்சங்கர் படங்கள் என்று ஆரம்பித்த சினிமா நடிப்பு பயணம் இன்றைய தலைமுறை நடிகர்கள் படங்கள் வரை தொடர்கிறது. சினிமாவில் தொடர்ந்த போதிலும் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றம் செய்து எட்டாயிரம் மேடைகளுக்கும் மேலான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். சின்னத்திரையில் பல நெடுந்தொடர்களிலும் நடித்து உள்ளார். சிவாஜியுடன் கௌரவம் என்ற படத்தில் தொடங்கி 28 படங்களில் நடித்துள்ளார். சிவாஜியின் மீது மிகுந்த பக்தி உடையவர். 1975 ல் ஜெமினிகணேசன் ,சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற படத்தை இயக்கினார்.
இவர் சுதா என்பவரை மணந்தார். மதுவந்தி,ஹர்சவர்த்தனா என இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சுதாவின் தங்கை லதாவைத்தான் ரஜினி மணந்தார்.
கலைக்குடும்பம்
இவரின் தந்தை பார்த்தசாரதி நாடக நடிகர். இவரின் சகோதரி வசுந்தரா தேவி நடிகை. இவரின் மகள் வைஜயந்தி மாலா பாலிவுட்டையும் கலக்கியவர். இவரது அம்மாவின் தாத்தா ரங்காச்சாரிதான் சென்சார் போர்டு அமைப்பை உருவாக்கியவர். இவர் சகோதரர் பாலாஜி நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலாஜியின் மகள் மோகன்லாலின் மனைவி. இப்படி ஒரு கலைக்குடும்பமான திகழ்ந்தது மகேந்திரனின் குடும்பம்.
இன்று 74 ஆண்டுகளை மட்டும் கடக்க வில்லை. கலை உலகில் பாலசந்தர் முதல் ஆரம்பித்து மூன்று தலைமுறை கடந்து இன்றைய தலைமுறை ரசிக்கும் ஆதிக்ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படம் வரை கலக்கி வருகிறார். திரைப்படம், நாடகம் என தனது இரண்டு கண்களாக தொடரும் இவரின் பயணம் அடுத்த தலைமுறையையும் சந்தோஷப்படுத்த நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்