HBD Malavika : KGF படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை மாளவிகா அவினாஷ் பிறந்தநாள் இன்று!
HBD Malavika Avinash : கே.ஜி.எஃப் படத்தில் கே.ஜி.எஃப் கதையை தோண்டி எடுக்கும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை மாளவிகா அவினாஷ் பிறந்தநாள் இன்று.
மாளவிகா அவினாஷ் கணேசன் சாவித்ரி தம்பதியினருக்கு மகளாக 1976 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு வங்கியாளர், எழுத்தாளர் ஆவார். அவரது தாயார் சாவித்திரி, ஒரு பாடகர் மற்றும் நடனக் கலைஞர். பரதநாட்டியத்தில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சிதாரில் பண்டிட் பார்த்தோ தாஸ் ஆகியோரின் பயிற்சியின் கீழ் கிளாசிக்கல் கலைகளை கற்று தேர்ந்தார்.
ஜி.வி. ஐயர் மாளவிகாவை ஒரு நடன நிகழ்ச்சியில் கிருஷ்ணனாகக் கண்டு தனது கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனாக நடிக்க வைத்தார். பின்னர் அவர் பிரேமா காரந்தின் பனோரமா குழந்தைகள் படமான நக்கலா ராஜகுமாரியில் இளவரசியாக முக்கிய வேடத்தில் நடித்தார்.
கைலாசம் பாலசந்தர் அவர்களின் அண்ணி நாடகம் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.இவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநில செய்தித் தொடர்பாளராக உள்ளார். கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். ஜீ கன்னடத்தில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான படுகு ஜடகா பந்தியை அவர் தொகுத்து வழங்கினார். மாளவிகா அவினாஷ் தமிழ், கன்னட திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றுபவர் ஆவார்.
இவர் நடிப்பிற்கு அப்பாற்பட்டு இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவர் நடிகர் அவினாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாளவிகா, நடிகர் அவினாஷை 2001 -ம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கால்வி என்ற மகள் உள்ளார்.
கே.ஜி.எஃப் படத்தில் கே.ஜி.எஃப் கதையை தோண்டி எடுக்கும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மாளவிகா அவினாஷ். தமிழில் முதலில் சீரியல் உலகில் கால் பதித்த மாளவிகா, கே. பாலச்சந்தர் கதை எழுதி சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘அண்ணி’ தொடரில் பெரும் பிரபலமானார்.
அதேபோல் சன் டிவியில் அவர் நடித்த ’ராஜ ராஜேஸ்வரி’ தொடர் மூலம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகையாக உருவெடுத்தார். தமிழில் ‘அண்ணி’ ‘ராஜ ராஜேஸ்வரி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், பிரபல இயக்குநர் சரண் இயக்கி மாதவன் நடிப்பில் வெளியான ஜே.ஜே திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஆறு படத்தில் கலாபவன் மணி மனைவியாகவும், டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தாயாகவும், ஆதி படத்தில் ராமச்சந்திரன் மனைவியாகவும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். ஆறு, ஆதி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜீவா, டாப்ஸி ஆகியோரது நடிப்பில் வெளியான ‘வந்தான் வென்றான்’ திரைப்படத்தில் நடித்தார்.
1988இல் கன்னடத்தில் அறிமுகமானாலும், தமிழில் 2003ஆம் ஆண்டுதான் அறிமுகமானார். அதற்கு முன்னர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.கன்னடம் மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டில் பாஜக-வில் இணைந்து தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.
நடிகை மாளவிகா அவினாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்