3 வயதில் தந்தை மரணம்.. முன்கோபம்.. தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்கள்.. பஞ்சு நினைவுநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  3 வயதில் தந்தை மரணம்.. முன்கோபம்.. தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்கள்.. பஞ்சு நினைவுநாள் இன்று!

3 வயதில் தந்தை மரணம்.. முன்கோபம்.. தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்கள்.. பஞ்சு நினைவுநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Apr 06, 2024 06:45 AM IST

Director Panchu : கடைசிவரை இந்த இரட்டையர்கள் பிரியவில்லை. மரணத்தால் தான் அது சாத்தியமானது. உதாரணத்திற்கு நீங்கள் கூகுளில் தேடினாலும் இருவரையும் ஒன்றாக தான் பார்க்க முடியும். தனியாக பார்ப்பது அறிது. பஞ்சு நினைவுநாள் இன்று.

இயக்குநர் பஞ்சுவின் நினைவுநாள்
இயக்குநர் பஞ்சுவின் நினைவுநாள்

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் உமையாள்புரத்தில் ஜனவரி 24ஆம் தேதி, 1984ஆம் ஆண்டு பிறந்தவர் தான், பஞ்சு. பஞ்சாபிகேசன் என்ற பெயரை சுருக்கி பஞ்சு என மாற்றிக்கொண்டார். குடும்பத்திற்கு ஒரே பிள்ளை என்பதால் இவருக்கு வீட்டில் செல்லும் அதிகம்.

 அதேபோல இவருக்கு முன் கோபமும் அதிகமாம். இவருக்கு மூன்று வயது இருக்கும் பொழுது அவரது தந்தை இறந்து விடுகிறார். அவரின் அம்மா சுப்புலட்சுமி பஞ்சுவை தனது அப்பா வீட்டிற்கு அழைத்து சென்று வளர்க்கிறார். பஞ்சுவுக்கு முன் கோபம் அதிகம் என்றாலும் சிறு வயதிலிருந்தே அவருக்கு பல்வேறு திறமைகள் இருந்துள்ளது.

இவர் தனது மாமா வீட்டிற்கு சென்று பள்ளி படிப்பை முடிக்கிறார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். இந்த நிலையில் தான் பட்டப் படிப்பை முடித்த பஞ்சுவுக்கு வேலை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் வஜ்ரவேல் முதலியாரின் எஸ்ஏன்ஸ் கம்பெனியில் இவருக்கு வேலை கிடைக்கிறது.

இவர் வேலை செய்யும் கம்பெனிக்கு அருகில் தான் புகழ்பெற்ற நாடக கொட்டகை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் இந்த கம்பெனியின் முதலாளி வஜ்ரவேலுக்கு சினிமா மீது தீவிர ஆர்வம் இருந்துள்ளது. இந்த ஆர்வத்தின் காரணமாக வஜ்ரவேல் வேலூரில் சினிமா கம்பெனி ஒன்று தொடங்குகிறார். அந்த கம்பெனிக்கு சந்திர பாரதி சினி டோன் என பெயர் வைக்கிறார்.

இந்த சினிமா கம்பெனியில் முதல் முதலில் வஜ்ரவேலு சதி அகல்யா என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை டிவி சேசையா என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் தான் எஸ்என்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்த பஞ்சு உதவி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் பட வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு பஞ்சுவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிரபாத் கண்ணபிரான் என்பவரிடம் உதவி கோறுகிறார். இவர்தான் இயக்குனர் கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தவர்.

ஆனந்த விகடனில் வந்த சதி லீலாவதி என்ற நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தை எம் என் டால்டன் என்பவர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் ஹாலிவுட் பிசியாக இருந்ததால் இந்த படத்தை இயக்க முடியவில்லை. அதனால் இந்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர்களை தேட வேண்டிய நிலை இருந்தது. அப்போது தான் கேமராமேனாக இருந்த எல்லிஸ் ஆர் டங்கன் என்பவரை இதற்கு இயக்குனராக முடிவு செய்கிறார்கள். எல்லிஸ் ஆர் டங்கன் ஒரு ஆங்கிலேயர்.

இந்நிலையில் பிரபாத் கண்ணபிரான் எல்லிஸ் ஆர். டங்கனிடம் பஞ்சுவை உதவி இயக்குனராக சேர்க்கிறார். எல்லிசாருக்கு தமிழ் தெரியாத என்பதால் ஆங்கிலத்தில் அவர் கூறும் கதை வசனம் அனைத்தையும் பஞ்சு மொழிமாற்றம் செய்து உதவுகிறார். இது அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. மிகவும் உறுதுணையாக பஞ்சு இருந்துள்ளார்.

மிகவும் பக்கபலமாக இருந்த பஞ்சு குறித்து கிருஷ்ணனுக்கு தெரிய வர அப்போதுதான் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் 1934 அன்று முதல் முறையாக சந்தித்தனர்.அதன் பிறகு இவர்கள் இணைந்து எடுத்த படங்கள் ஏராளம். அவற்றில் சில பார்போம்.

பூம்பாவை

 பங்கஜவல்லி

பைத்தியக்காரன்

ரத்தினகுமார்

நல்ல தம்பி

பராசக்தி

ரத்தக்கண்ணீர்

குழந்தையும் தெய்வமும்

பெற்றால்தான் பிள்ளையா

தெய்வப்பிறவி

பூக்காரி

பேர் சொல்ல ஒரு பிள்ளை

கடைசிவரை இந்த இரட்டையர்கள் பிரியவில்லை. மரணத்தால் தான் அது சாத்தியமானது. உதாரணத்திற்கு நீங்கள் கூகுளில் தேடினாலும் இருவரையும் ஒன்றாக தான் பார்க்க முடியும். தனியாக பார்ப்பது அறிது. 1984 ஏப்ரல் 6 அன்று பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார். இன்று அவரின் நினைவுநாள். இன்றையதினம் அவரை நினைவுகூறுவோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.