HBD Pandiyan: மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவருக்கு வாழ்க்கையில் விளையாடிய விதி' மதுரை தந்த 'பாண்டியன்'!
இப்படி 1983 ல் மண்வாசனை படத்தில் ஆரம்பித்த பாண்டியனின் திரை பயணம் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித்தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மதுரை மண்ணுக்கு சொந்தகாரன் "மண்வாசனை" பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் பாண்டியனின் திரைப்பயணம் குறித்து இங்கு பார்க்கலாம். கதாநாயகன் வில்லன் குணச்சித்திர நடிகராக தமிழ் திரையில் வலம் வந்த நடிகர் பாண்டியன் பிறந்த நாள் இன்று .
பிறப்பு
1959 ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியில் மதுரையில் பிறந்தவர் பாண்டியன்.
திரைப்பயணம்
பாண்டியன் திரை உலகிற்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. இயக்குனர் பாரதிராஜா தனது மண்வாசனை படத்துக்கு ஹீரோ தேடிக்கொண்டிருந்த நேரம் அது. மும்பையில் இந்தி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை யில் ஹீரோ தேடுகிறார். ஹீரோயினாக ரேவதி உறுதி செய்து விட்டு படக்குழுவினர் அனைவரையும் தேனி மாவட்டம் கிளம்ப சொல்லி விட்டு ஹீரோ தேடி மதுரைக்கு சென்றார் பாரதி ராஜா. மதுரை மீணாட்சி அம்மன் கோவில் அருகே பாரதிராஜா வந்த போது ஆட்டோகிராப் வாங்க வந்தவர் தான் பாண்டியன். அந்த சந்திப்புதான் அவரை மண்வாசனை படத்தின் ஹீரோவாக மாற்றியது.