HBD Vikram: ‘வலிகளை கடந்த வயோதிக வாலிபன்’ சீயான் எனும் நடிப்பு அரக்கன்! நடிகர் விக்ரம் பிறந்த நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vikram: ‘வலிகளை கடந்த வயோதிக வாலிபன்’ சீயான் எனும் நடிப்பு அரக்கன்! நடிகர் விக்ரம் பிறந்த நாள் இன்று!

HBD Vikram: ‘வலிகளை கடந்த வயோதிக வாலிபன்’ சீயான் எனும் நடிப்பு அரக்கன்! நடிகர் விக்ரம் பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 17, 2024 06:00 AM IST

HBD Vikram: எல்லா சிரமங்கள் தாண்டி வெளிவந்து திரையரங்குகளுக்கு மவுத் டாக் மூலம் ரசிகர்கள் வந்து கொண்டாடினர். 1999 ல் இந்த படம் விக்ரம் வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்தது. விக்ரம் என்ற கலைஞனின் வாழ்க்கை சேதுவுக்கு முன்பு.. சேதுவுக்கு பின்பு என்று இரண்டாக பிரிந்தது.

நடிகர் விக்ரம் பிறந்தநாள்
நடிகர் விக்ரம் பிறந்தநாள்

பிறப்பு

வினோத் ராஜ் என்ற ஜான் விக்டருக்கும் ராஜேஷ்வரிக்கும் பரமக்குடியில் பிறந்தவர். அவர் தாயின் சகோதரர் தான் பிரசாந்த் அவர்கள் அப்பா தியாகராஜன் ஆவார். விக்ரமுக்கு ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உண்டு. சிறுவயதில் சேலம் ஏற்காட்டில் சிறு வயதில் படித்து விட்டு சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றவர்.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போது அங்கே நடைபெறும் நாடகங்களில் பங்கேற்றார். விக்ரம் தந்தை நடிப்பில் ஆர்வம் உடையவர். தமிழ் திரைப்படம் தொலைக்காட்சி தொடர்களில் சிறு வேடங்களில் நடித்தவர். இந்த விசயம் விக்ரம் மனதில் பதிய நடிப்பு நடனம் ஆட பயிற்சி பெற்று வந்தார். சண்டை பயிற்சி நீச்சல் குதிரை ஏற்றம் என்று சகல துறைகளிலும் பயிற்சி பெற்றார்.

ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் மாடலிங் ஆக நடித்து வந்தார். திரைப்பட துறையில் ஹீரோவாக 1990 ல் என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் ரேகா நம்பியார் உடன் நடித்தார். இதை தொடர்ந்து ஶ்ரீதர் இயக்கத்தில் தந்து விட்டேன் என்னை என்ற பெயரில் இரண்டாவது படமும் அமைந்தது. மீரா காவல் கீதம் என்று அவர் பயணம் மலையாளப்பட உலகம் தெலுங்கு மொழி வரை நீண்டது. இருந்த போதிலும் தமிழ் திரைப்பட உலகில் வாய்ப்புகள் குறைந்தது. சில படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பிற ஹீரோக்களுக்காக பின்னணி குரலும் கொடுத்து இருக்கிறார். துணை கதாபாத்திரங்களில் நடிப்பதை ஒரு கட்டத்தில் தவிர்த்தார். 

இந்நிலையில் பெரிய இடைவெளியை சரி செய்ய நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்தார். 1999 ல் அறிமுக இயக்குனராக வந்த பாலா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சேது படத்தில் கதாபாத்திரத்தை உணர்ந்து எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் விசயங்களை அவர் செய்தார். தலையை மொட்டை அடித்து கொண்டு இருபது கிலோ எடையை குறைத்து நடித்தது திரைப்பட உலகில் பிரமிப்பூட்டியது. 

சேது திரைப்படம் விக்ரமுக்குள் இருந்து இன்னொரு புதிய நடிகனை இந்த உலகத்துக்கு காட்டியது. ஆனால் இந்த படமும் வெளி வருவதற்குள் நிறைய கஸ்டம். எல்லா சிரமங்கள் தாண்டி வெளிவந்து திரையரங்குகளுக்கு மவுத் டாக் மூலம் ரசிகர்கள் வந்து கொண்டாடினர். 1999 ல் இந்த படம் விக்ரம் வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்தது. விக்ரம் என்ற கலைஞனின் வாழ்க்கை சேதுவுக்கு முன்பு.. சேதுவுக்கு பின்பு என்று இரண்டாக பிரிந்தது.

சேதுவில் முதல் பாதியில் வணிக ரீதியான படத்தை போல துள்ளி குதித்து திரியும் கல்லூரி இளைஞனாகவும் பின்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனாக நிறைவுப் பகுதி வரை அவர் நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் இருக்கும். இந்த சோகத்தை ரசிகர்கள் மாபெரும் வெற்றியை கொடுத்து பாராட்டினர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அதே பாலா இயக்கத்தில் பிதாமகன் என்ற படத்தில் ஆட்டிசம் போன்ற மனப்பிறழ்வான தோற்றத்திலும், சங்கர் இயக்கத்தில் சமுகத்தில் புரையோடி போயிருக்கும் லஞ்சத்துக்கு எதிராக சாதாரணமாக பயந்து நடுங்கும் அம்பி என்ற கதாபாத்திரம் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி நிலையில் பலருக்கும் அந்நியன் ஆக மாறி தண்டனை கொடுப்பதெல்லாம் வேறு லெவல் நடிப்பு. 

ஏழு வயது சிறுவனுக்குரிய குணநலன்களோடு ஒரு முதிர்ந்த இளைஞனாக தெய்வ திருமகள் என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை தந்திருப்பார். இதை கெட்டப் மாற்றம் என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அதற்கான பொறுமை உடலை வருத்திக் கொள்வது உணவுக்கட்டுப்பாடுகள் உடலிலிருந்து மனது வரை அந்த கதாபாத்திரத்துக்காக மெனக்கெடுதல் என்பது ஒரு தவம் மாதிரியான விசயம். அதை செய்ய தொழில் ஈடுபாடும் பெரும் அர்ப்பணிப்பு உள்ள ஒருவரால் மட்டுமே முடியும். விக்ரம் தனது படங்களில் நடிக்கும் போது தனக்குள்ளிருந்து இன்னோரு புதிய நடிகனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ராவணன் திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாரிக்கப்பட்டதன் மூலம் பாலிவுட் நடிகர் ஆனார். இவரது படங்களை தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. தேசிய விருதுகள் பெற்றுள்ளார். ஏழு முறை பிலிம்பேர் விருது பெற்றவர். தமிழக அரசின் விருது கலைமாமணி விருது கௌரவ டாக்டர் பட்டம் பல்வேறு அமைப்பு விருதுகள் எல்லாம் இவருக்கு பெருமை சேர்த்தது. 

திரைப்படம் தாண்டி பல்வேறு நிறுவனங்களில் விளம்பர தூதுவராக பணியாற்றி வருகிறார். இவருடைய படங்கள் பல சர்வதேச விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்கள் பெற்று வருகிறது. கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த உளவியல் ஆசிரியரான சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். அவருடைய மகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். மகன் துருவ் அவர்களையும் தமிழ் திரைப்பட உலகில் ஹீரோ வாக உருவாக்கி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.