Nenjathai Killathe: மது குடும்பத்தால் கடுப்பான கௌதம்.. போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nenjathai Killathe: மது குடும்பத்தால் கடுப்பான கௌதம்.. போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்

Nenjathai Killathe: மது குடும்பத்தால் கடுப்பான கௌதம்.. போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 04, 2024 06:33 PM IST

மது குடும்பத்தால் கடுப்பான கௌதம், போலீஸ் வரை சென்ற குடும்ப பஞ்சாயத்து என நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் சில சுவாரஸ்ய திருப்பங்கள் இடம்பெற இருக்கின்றன.

 மது குடும்பத்தால் கடுப்பான கௌதம்., போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து
மது குடும்பத்தால் கடுப்பான கௌதம்., போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா அவளது அம்மாவுடன் வர எதிரே கௌதம் வர இருவரது காரும் மோதி கொண்டு விபத்து உண்டாகிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அப்செட்டாகும் கெளதம்

அதாவது, மதுமிதாவும் அவளது அம்மாவும் சத்தம் போட ஒரு கட்டத்தில் கௌதம் கடுப்பாகி வெளியே எழுந்து வரும் போது மதுமிதா அங்கிருந்து நகர்ந்து விட ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போகிறது.

இதையடுத்து கௌதம் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று பேச முயற்சி செய்ய அப்போதும் மதுமிதாவை பார்க்க முடியாமல் போக அந்த நேரம் சகுந்தலா போன் செய்து நல்ல நேரம் முடிந்து போச்சு, உன் அப்பாவுக்கு திதி கொடுக்க நீ வர வேண்டாம் என்று சொல்ல கௌதம் அப்செட்டாகி வீட்டுக்கு வருகிறான்.

வீட்டுக்கு வந்த கெளதம் இது எல்லாத்துக்கும் காரணம் அந்த குடும்பம் தான், அவங்களை சும்மா விட மாட்டேன் என்று கோபப்பட்டு போலீசில் கம்பளைண்ட் கொடுக்கின்றனர்.

போலீஸ் கம்பளைண்ட்

அடுத்த நாள் மதுமிதா பூரி செய்து கொண்டிருக்க அவளது அம்மா யாருக்காக என்று கேட்டதும் உங்க பையன் வாரான் என்று சொல்கிறாள். போலீஸ் மதுமிதா வீட்டுக்கு வந்து உங்க மேல கம்பளைண்ட் வந்து இருக்கு ஸ்டேஷன் வாங்க என்று கூப்பிட மதுவின் அம்மா எனக்கு ஆடிஷன் இருக்கு என்று மதுவையும் அவளது அப்பாவையும் அனுப்பி வைக்கிறாள்.

இதையடுத்து மதுமிதா ஸ்டேஷன் வர போலீஸ் கௌதமுக்கு சப்போர்ட்டாக பேசுகின்றனர், இதையடுத்து வெளியே வந்த மதுமிதா கௌதம் வீட்டில் இருந்து வந்த காரை பின்தொடர்ந்து அவனது வீட்டுக்கு செல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

புதிய சீரியலாக நெஞ்சத்தை கிள்ளாதே

கடந்த 2014இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எஸ்.பி.பி. சரண், ரேணுகா, சோனியா ஆகியோர் நடிப்பில் ஏற்கனவே நெஞ்சத்தை கிள்ளாதே என்ற பெயரில் சீரியல் ஒளிபரப்பானது.

இதைத்தொடர்ந்து தற்போது அதே பெயரில் ரோஜாவனம், ரோஜாக்கூட்டம், ராமகிருஷ்ணா, காற்றுள்ளவரை போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ், விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மா முரளிதரன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

நெஞ்சத்தை கிள்ளாதே கதை

நெஞ்சத்தை கிள்ளாதே தொடர் நந்தினி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது, அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கிறார். பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் காண பாடுபடுகிறார்.

இந்தத் தொடர் காதல், துரோகம் மற்றும் குடும்ப உறவு ஆகியவற்றை உணர்வுபூர்வமாக சொல்கிறது.

நந்தினியின் போராட்டங்கள், வெற்றிகள் நிறைந்த பயணத்தில் காதல், பாசம் போன்றவற்றின் கலவையுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திருப்பங்களுடன் கதை அமைந்துள்ளது. நெஞ்சத்தை கிள்ளாதே ஒரு பெண்ணின் விடாமுயற்சியாக கதை மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.