இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் - சினிமா (ஏப்ரல் 20)
கோலிவுட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..
அடடே சுந்தரா டீஸர்
தெலுங்கில் உருவாகி இருக்கும் , திரைப்படம் , ' அசோக வனம்லோ அர்ஜூன கல்யாணம்' . வித்யாசாகர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நானி மற்றும் நஸ்ரியா நடித்து இருக்கின்றனர். தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது .
டி. ராம ராவ் உயிரிழப்பு
அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களைத் தயாரித்த மூத்த தயாரிப்பாளரும் , இயக்குநருமான டி ராம ராவ் இன்று ( ஏப்ரல் 20 ) உயிரிழந்தார் .
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் கவின் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை கனேஷ் பாபு இயக்க உள்ளார் . ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ( ஏப்ரல் 21 ) வெளியாக உள்ளது .
திருமண நாள்
பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இன்று தங்கள் திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர் .
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து
இயக்குநர்கள் கதையின் ஒன் லைனை ஹீரோவிடம் சொல்லி , சம்மதம் வாங்கிவிட்டு படத்தை நன்கு இயக்குவது இல்லை என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.
ஷாஹித் கபூர்
’ கபீர் சிங் ‘ படத்தின் படப்பிடிப்பு போது , புகைப் பிடிப்பதை நிறுத்தினேன் என ஷாஹித் கபூர் தெரிவித்து உள்ளார் .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவை மாற்றி , தலைவர் 169 படம் தொடர்பான பஞ்சாயத்தை முடித்து வைத்து இருக்கிறார் .
கைதி ரீமேக்
கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு , போலா என பெயரிடப்பட்டு உள்ளது .
விஜய் சேதுபதிக்கு நோ
’ காதலும் கடந்து போகும் ‘ படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் விஜய் சேதுபதியுடன் நடிக்க நோ கூறி இருந்தார் .
சாமி தரிசனம்
சீரியல் நடிகர் நவின்குமார் தனது வருங்கால மனைவி கண்மணியுடன் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார் .
நடிகர் விமல் மீது புகார்
நடிகர் விமல் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெரவள்ளூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் சர்ச்சை பேச்சு
மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்கியராஜ் சர்ச்சை கிளப்பி இருக்கிறார்.
காஜல் அகர்வால் குழந்தை பெயர்
நடிகை காஜல் அகர்வால் நேற்று பிறந்த தனது ஆண் குழந்தைக்கு நீல் கிச்சிலு என பெயர் வைத்து உள்ளார் .
முதல்வருடன் சந்திப்பு
இயக்குநர் சீனு ராமசாமி , தமிழகத்தை ஆளும் ' ஆண் தாய் ' முதல்வரை மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வந்த குலு குலு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது .
கங்குபாய் கத்தியவாடி
ஆலியா பட் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான, கங்குபாய் கத்தியவாடி ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது .
பி.வி. சிந்து நடனம்
பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள , அரபிக்குத்து பாடலுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து நடனமாடி உள்ளார்.
ஏகே 61
ஏகே 61 படத்திற்கு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் .
டாபிக்ஸ்