M.R.Radha : நடிப்பின் சிகரம்.. நல்ல மனிதன்.. மாபெரும் வில்லன்.. எம்.ஆர்.ராதா நினைவு நாள் இன்று!
தலை சிறந்த கலைஞன் நடிகர் எம்.ஆர்.ராதா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நாம் அவரை நினைவுக்கூறுவோம்.
நடிகர் எம்.ஆர்.ராதா நடிப்புத் திறமையும், அசாத்திய உச்சரிப்பும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைபெற்றது. மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணா என்ற எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார். சிறுவயதில் ராதா தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து 10 வயதில் இருந்தே சிறு சிறு வேடங்களில் நாடகங்களில் நடிக்க தொடங்கினார். கடைசியில் நாடகங்களுக்கான கதைகள் அவருக்காகவே எழுதப்பட்டது. ஒரு கட்டத்தில் ராதாவின் மேடை நாடகமான ரத்த கண்ணீர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
அந்த படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமடைந்தார். ரத்தக்கண்ணீர் படத்தில் எம் ஆர் ராதா நடிக்கவில்லை இந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். அதில் அவர் வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படி நாடகத்தை தொடர்ந்து அவர் திரைத்துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தார்.
ரத்தக்கண்ணீர் படத்தில் மாமனாரிடம் பேசும் போது இடம்பெற்ற இவரின் இந்த வசனம், “ஏன்னா மேன் ரவுடி தனம் பண்ணுற
"நானா ரௌடித்தனம் பண்ணுறேன்"
தன்னிகின்னி அடிச்சி இருக்கியா??
"நானா தண்ணி அடிச்சி இருக்கேன்"
பின்ன ஏன் உளறுற
"நானா உளருறேன்"
கையை நெட்டி பேசாத
"நானா கைய்யை நீட்டி பேசுறேன்"
எஜுகேஷன் இல்லாத பய
"நான் எச்சைகலையா”
"இங்கிலீஷ் இவன் கிட்ட மாட்டிகிட்டு தவியா தவிக்கிறது" இதுபோல ஆங்கிலத்தில் இவரின் ஸ்டைலில் பேசும் இந்த வசனங்கள் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இதுபோல இப்படத்தில் பல வசனங்கள் ட்ரெண்ட்.
இயக்குனர் ஏ பீம்சிங் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு புத்த பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பாவமன்னிப்பு திரைப்படத்தில் எம் ஆர் ராதா ஆளவந்தான் கதாபாத்திரத்தில் நகைக்கடை உரிமையாளராக நடித்து அசத்தி இருப்பார்.
இயக்குனர் கே சோமு இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளியான நல்ல இடத்து சம்பந்தம் திரைப்படத்தில் எம் ஆர் ராதா முத்து என்னும் கதாபாத்திரத்தில் திருட்டுத்தனத்தில் ஈடுபடுபவராக நடித்து காவல்துறைக்கே தண்ணி காட்டி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
1959 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், எம் ஆர் ராதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்
பாகப்பிரிவினை. இதில் எம் ஆர் ராதா சிங்கப்பூர் சிங்காரம் என்னும்கதாபாத்திரத்தில் இவர் அடிக்கும் கவுண்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது.
பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த ராதா விதவையின் கண்ணீர் என்ற நாடகத்தை தயாரித்தார். ஆனால் சிலர் அந்த நாடகத்திற்கு தடை கோரி நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து அந்த நாடகத்தை பார்த்த நீதிபதி கணேச ஐயர் ராதாவின் நாடகத்தை பார்த்து விட்டு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
கருணாநிதி எழுதி நடித்த தூக்கு மேடை நாடகத்தில் அபிநய சுந்தர முதலியார் என்ற வைதீக சிந்தனையாளராக நடித்திருந்தார். கருணாநிதியும் மாணவர் தலைவராக நடித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆகச்சிறந்த நாயகனாக விளங்கிய நடிகர் எம்.ஆர்.ராதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நாம் அவரை நினைவுக்கூறுவோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்