தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tillu Square Box Office: ‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரும்..' அனுபாமாவால் கொட்டும் கோடிகள்.. தில்லு ஸ்கொயர் வசூல் இங்கே!

Tillu Square Box Office: ‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரும்..' அனுபாமாவால் கொட்டும் கோடிகள்.. தில்லு ஸ்கொயர் வசூல் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 09, 2024 05:20 PM IST

காமெடி, காட்டுத்தனமான ரொமான்ஸ், அடிக்கடி அரங்கேறும் லிப் லாக் காட்சிகள், ’தில்லு ஸ்கொயர்’ படத்துக்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

தில்லு ஸ்கொயர் பாக்ஸ் ஆஃபிஸ்!
தில்லு ஸ்கொயர் பாக்ஸ் ஆஃபிஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

டிஜே தில்லு படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான ’தில்லு ஸ்கொயர்’ தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. 

காமெடி, காட்டுத்தனமான ரொமான்ஸ், அடிக்கடி அரங்கேறும் லிப் லாக் காட்சிகள், ’தில்லு ஸ்கொயர்’ படத்துக்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

தில்லு ஸ்கொயர் படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி இருக்கிறது. 

ஆம், இந்தியாவில் இந்தப்படம் கடந்த 11 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 59 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தில்லு ஸ்கொயர் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்:

தில்லு ஸ்கொயர் திரைப்படம், ரிலீஸான அதன் தொடக்க நாளில் ரூ.11.2 கோடி வசூலித்ததாகத் தெரிகிறது. இரண்டாம் நாள் ரூ.10.25 கோடி வசூல் செய்த இப்படம், மூன்றாவது நாள் மட்டும் ரூ.11.1 கோடியை வசூலித்தது. 

நான்காம் நாளில் ரூ.6.25 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ.4.4 கோடியும், ஆறாம் நாளில் ரூ.3.15 கோடியும், ஏழாம் நாளில் சராசரியாக ரூ .2.65 கோடி ரூபாயையும் வசூல் செய்திருக்கிறது. 

எட்டாவது நாளில் 2.1 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ஒன்பதாவது நாளில் 3.25 கோடி வசூல் செய்தது. பத்தாவது நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த திரைப்படம் 11 நாளான நேற்று 1.4 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக sacnilk.com தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்து இருக்கிறது. 

இன்றைய தினத்தை பொருத்தவரையில், இந்தப்படம் 2.07 கோடி ரூபாய் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆக மொத்தமாக பார்க்கும் போது, தில்லு ஸ்கொயர் திரைப்படம் 61.57 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. 

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூரின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான போதும், இந்தப்படம் நார்மலாக செல்வதாக சொல்லப்படுகிறது. 

தில்லு ஸ்கொயர் படம் எத்தகையது?

டி.ஜே.தில்லு படத்தின் இரண்டாம் பாகமான தில்லு ஸ்கொயரில் தில்லு என்னும் கதாபாத்திரத்தில் சித்து ஜொன்னலகட்டாவும், அவரது காதலி லில்லியாக அனுபாமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.

முந்தைய பாகம்போன்றே தில்லு யாரைக் காதலிக்கிறார், அவர்களுக்குள் வரும் சிக்கல்கள், அதன்பின் தில்லு அதனை எப்படிச் சமாளிக்கிறார் என்பதுமே படத்தின் கதை.

ரவி ஆண்டனியுடன் இணைந்து இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ள படத்தின் ஹீரோ சித்துவை, அதன் டபுள் மீனிங் தன்மைக்காக பலரும் வசைபாடி வருகின்றனர். இந்தப் படம் வெளியான பிறகு, படத்தின் மூன்றாம் பாகத்தை அடுத்து எடுக்கயிருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், தில்லு 3யின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

வரவிருக்கும் படைப்பு:

சித்து ஜொன்னலகட்டாவுக்கு ஜாக், தெலுசு காதா உட்பட ஏராளமான படங்கள் கையில் உள்ளன. இந்த சூட்டிங்கில் சித்து பிஸியாக இருக்கிறார். அதன்பின், தனது நண்பரும் ஒப்பனையாளருமான நீரஜா கோனாவின் முதல் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

அனுபாமா பரமேஸ்வரன், தற்போது நடிகர் சுரேஷ் கோபியுடன், ஜே.எஸ்.கே ட்ரூத் ஷெல் ஆல்வேஸ் பிரிவெயில் என்னும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் புதிய படத்தில் அனுபாமாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அனுபாமா தமிழிலும் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்