Thunivu Second Look : அடுத்தடுத்து போஸ்டர் வெளியிடும் ஏகே 61 படக்குழு
துணிவு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 61 ஆவது படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ( செப் 21) வெளியானது. துணிவு என தலைப்பு வைத்து இருக்கும் இந்த போஸ்டரில் அஜித், துப்பாக்கியுடன் அமர்ந்து இருந்தார்.
இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் மிகவும் கெத்தான லுக்கில் அஜித் இருக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரரை விட இரண்டாவது லுக் போஸ்டர் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
போனி கபூர் – ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்து இருக்கும் திரைப்படம் ஏகே 61. இதில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.
தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா பணியாற்றி வருகிறார்.