Thug Life: தக் லைஃப் படத்தின் சூட்டிங் ஆரம்பம் - படக்குழுவினர் யாரெல்லாம் தெரியுமா?
தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும், ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் பல முக்கியமான படங்களை இயக்கிய இயக்குநர். அஞ்சலி, ரோஜா, பாம்பே, நாயகன், தளபதி, அலைபாயுதே, குரு, ஓகே கண்மணி, ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர்.
இவரது சினிமாக்கள் பலவும் தமிழைத்தாண்டி இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன.
இந்நிலையில் நாயகன் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தின் பெயர், தக் லைஃப். இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் இணைத்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸும் இணைந்து தயாரிக்கின்றன. ரெட் ஜெயன்ட் இப்படத்தை வெளியிடவுள்ளது. இப்படத்துக்குண்டான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் செய்கிறார்.
இந்நிலையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஐஸ்வர்ய லட்சுமி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்