இது எமனுக்கும் எனக்கும் நடக்குற கத.. தெறிக்க தெறிக்க வெளியான தக் லைஃப் பட ட்ரெயிலர்!
கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் ட்ரெய்லர் அதிரடி சண்டைக் காட்சிகளுடனும் வசனங்களுடனும் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (மே 17, 2025) வெளியாகியுள்ளது. நாயகன் (1987) படத்திற்குப் பிறகு சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் கமல் ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எமனிடமிருந்து காப்பாற்றியவனே எமனான கதை
இந்தப் படத்தில் எமனிடம் இருந்து கமலை காப்பாற்றும் சிறுவனாக அறிமுகமாகிறார் சிம்பு. பின் அவருடனேயே வளர்ந்து வந்து அவருடைய இடத்தை பிடிக்க நடக்கும் சண்டை தான் தக் லைஃப் படமாக உள்ளது. எமனிடம் இருந்து காப்பாற்றியவனே தனக்கு எமனாக வந்தால் எப்படி இருக்கும் என்பதை இப்படத்தின் ட்ரெயிலர் மூலம் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் காட்டி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கமலின் மனைவியாக அபிராமியும் காதலியாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். கமலுக்கு அடுத்த படியாக ரங்கராய சக்திவேல் நாயக்கர் இடத்திற்கு சிம்பு வருவதை விரும்பாதவராக நாசரின் கதாப்பாத்திரம் காட்டப்படுகிறது.