தொடர் சர்ச்சை.. தொடர் வசூல் சரிவு.. தியேட்டர்களில் 2000 காட்சிகளாக குறைக்கப்பட்ட தக் லைஃப் படம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொடர் சர்ச்சை.. தொடர் வசூல் சரிவு.. தியேட்டர்களில் 2000 காட்சிகளாக குறைக்கப்பட்ட தக் லைஃப் படம்..

தொடர் சர்ச்சை.. தொடர் வசூல் சரிவு.. தியேட்டர்களில் 2000 காட்சிகளாக குறைக்கப்பட்ட தக் லைஃப் படம்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 12, 2025 10:09 AM IST

மணிரத்னத்தின் தக் லைஃப் படம் நாளுக்கு நாள் வசூலில் சரிந்து கொண்டே வருவதால் தியேட்டர்களில் இருந்து படத்தின் காட்சிகள் 2089 ஆக குறைந்துள்ளது.

தொடர் சர்ச்சை.. தொடர் வசூல் சரிவு.. தியேட்டர்களில் 2000 காட்சிகளாக குறைக்கப்பட்ட தக் லைஃப் படம்..
தொடர் சர்ச்சை.. தொடர் வசூல் சரிவு.. தியேட்டர்களில் 2000 காட்சிகளாக குறைக்கப்பட்ட தக் லைஃப் படம்..

குறையும் வசூல்

படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருந்த நிலையில் 6 ஆம் நாள் வசூல் 2 கோடியாக குறைந்தது. இதனால் படத்தின் வசூல் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதற்கிடையில், படக்குழுவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அது படத்தின் வசூல் குறைப்பால், திரையரங்குகளில் தக் லைஃப் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றம் அளித்த பாடல்கள்

தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி போன்றோர் நடித்தது மட்டுமின்றி இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருப்பதால் வரவேற்பு மிக அதிகமாக இருந்தது. அத்தோடு, படத்தின் பாடல்கள் மக்களின் கவனத்தை பெற்ற நிலையில், அவை படத்தில் இடம்பெறாமல் போனதும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக மக்கள் பெரிதாக தியேட்டருக்கு வரவில்லை.

காட்சிகள் குறைப்பு

இதனால், முதல் நாளில் அதாவது படம் வெளியான ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் 4917 காட்சிகள் வெளியானது. ஆனால், 6 ஆவது நேற்று படத்தின் காட்சிகள் 2089 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தக் லைஃப் படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் நாட்களில் எப்படி வசூல்?

வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்காததால், வரும் வார நாட்களில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. முன்னதாக இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படமான இந்தியன் 2, தக் லைஃப் திரைப்படத்தை விட சிறப்பாக ரூ. 62.15 கோடி நான்கு நாட்களில் வசூலித்தது, மேலும் முதல் வார இறுதியில் ரூ. 59.15 கோடி வசூலித்தது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் I மற்றும் II திரைப்படங்கள் அந்த நேரத்தில் முறையே ரூ. 120.15 கோடி மற்றும் ரூ. 103.75 கோடி வசூல் செய்தன.

தக் லைஃப் படம்

தக் லைஃப் திரைப்படத்தில் கமல் சக்திவேல், அதாவது சக்தி என்ற கதாப்பாத்திரத்திலும், சிலம்பரசன் அவரது வளர்ப்பு மகன் அமர் ஆகவும் நடித்துள்ளனர். த்ரிஷா இந்திரா எனும் பெயரிலும் நடித்துள்ளார். மேலும் அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபசல், சன்யா மல்ஹோத்ரா மற்றும் ரோஹித் சரஃப் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கர்நாடகாவில் தடை

தக் லைஃப் என்பது கமல் மற்றும் மணி 1987-ல் வெளிவந்து வெற்றி பெற்ற நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாகும். மொழிப் பிரச்னை காரணமாக கர்நாடகாவில் படம் தடை செய்யப்பட்டதும் படத்தின் வசூலை பாதித்திருக்கலாம், ஏனெனில் ஆந்திரப் பிரதேசம்-தெலுங்கானாவைத் தவிர, தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல சந்தையாக கர்நாடகா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.