Thug Life: இனி அடுத்த கட்டம் தான்... தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு-thug life movie shooting wraped production release video - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thug Life: இனி அடுத்த கட்டம் தான்... தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு

Thug Life: இனி அடுத்த கட்டம் தான்... தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு

Malavica Natarajan HT Tamil
Sep 24, 2024 06:01 PM IST

Thug Life: இயக்கநர் மணிரத்னம்- நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தது. இனிஅடுத்தகட்ட பணிகள் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Thug Life: இனி அடுத்த கட்டம் தான்... தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு
Thug Life: இனி அடுத்த கட்டம் தான்... தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு

மீண்டும் இணைந்த கூட்டணி

மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன்- இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிவரும் திரைப்படம் தக் லைஃப். இவர்கள் இருவரின் கூட்டணியில் இதற்கு முன் வெளியான நாயகன் படம் இன்றளவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிவரும் தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், மொத்த படத்திற்கான படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதையடுத்து, டப்பிங், எடிட்டிங் உள்ளி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளையும் படக்குழு தீவிரப் படுத்தியுள்ளது.

கதாநாயகியே இல்லாத கமல்

தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடிப்பதாகவும், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக யாரும் இல்லை எனவும் தெரிகிறது.

இப்படத்தில் அபிராமி, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ரவி கே. சந்திரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கொண்டாட்டம்

தக் லைஃப் படத்தின் நாயகனான கமல் சினிமாவிற்கு அறிமுகமாக 65 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடினர். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெரும் புள்ளியாக உள்ள கமல் ஹாசன் இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை

இந்நிலையில், இந்த தக் லைஃப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 149 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு பெற்றுள்ளது. இதுவரை மற்ற படங்கள் பெற்ற டிஜிட்டல் உரிமைக்கான தொகையைக் காட்டிலும் இது அதிகம் என்பதால் படக்குழுவினர் உற்சாகத்துடன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

படப்பிடிப்பு நிறைவு

தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத்தில் நடித்தவர்கள் பலரும் சோசியல் மீடியாவில் தெரிவித்து வந்த நிலையில், தற்போது, படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். மேலும், வீடியோவின் இறுதியில், இயக்குநர் மணிரத்னம் இட் இஸ் ஏ விராப் எனக் கூறி படப்பிடிப்பு முடிந்தது என அறிவித்து மகிழ்ச்சி அடைகிறார். மேலும், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.