வெளியானது 'தக் லைஃப்' படத்தின் முதல் விமர்சனம்.. இது கமல்ஹாசனின் மற்றொரு கிளாசிக் திரில்லரா?
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாக உள்ள இந்தப் படம், ஒரு கலாசிக த்ரில்லர் என வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 37 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'நாயகன்' திரைப்படம் ஒரு கலாசிக திரைப்படமாக இன்றும் போற்றப்பட்டு வருகிறது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
தக் லைஃப்.. ஒரு கிளாசிக் த்ரில்லர்!
தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் விமர்சனம் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமர் சந்து இதற்கு விமர்சனம் எழுதியுள்ளார். அவர் இந்தப் படத்தை அளவுக்கு அதிகமாக பாராட்டியுள்ளார். இது ஒரு கிளாசிக் த்ரில்லர் என அவர் கூறியுள்ளார்.