தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: லட்சத்தில் குறையும் ஒரு நாள் வசூல்.. சோதனை கட்டத்தில் தக் லைஃப்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: லட்சத்தில் குறையும் ஒரு நாள் வசூல்.. சோதனை கட்டத்தில் தக் லைஃப்..

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: லட்சத்தில் குறையும் ஒரு நாள் வசூல்.. சோதனை கட்டத்தில் தக் லைஃப்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 17, 2025 05:16 PM IST

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: தக் லைஃப் படம் வெளியான 12 ஆவது நாளில் இந்திய அளவில் படம் ரூ.29 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: லட்சத்தில் குறையும் ஒரு நாள் வசூல்.. சோதனை கட்டத்தில் தக் லைஃப்..
தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: லட்சத்தில் குறையும் ஒரு நாள் வசூல்.. சோதனை கட்டத்தில் தக் லைஃப்..

50 கோடி தாண்டாத தக் லைஃப்

திரையரங்குகளில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கணக்கிட்டு கூறும் Sacnilk.com எனும் இணையதள கருத்து படி, தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் முழுவதுமாக முடிந்த பின்னும், இன்னும் இந்தியாவில் ரூ. 50 கோடியைத் தாண்டவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளது.

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தக் லைஃப் படம் வெளியான 12 ஆவது நாளான நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்ததாக அறிக்கை கூறுகிறது. இது தான் தக் லைஃப் படத்தின் மிகவும் குறைந்தபட்ச வசூல் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்போது வரை தக் லைஃப் படம் ரூ. 46.84 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. இன்னும் ரூ. 50 கோடியை தாண்டவில்லை என்பது பெரும் சோகம் தான். படம் வெளியான முதல் வார இறுதிக்குப் பிறகு படம் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்பதே உண்மை.

ஒரே வாரத்தில் முடிந்த வசூல்

தக் லைஃப் தனது முதல் வார வருமானத்தை ரூ. 44 கோடியாக முடித்தது. தக் லைஃப் படத்தின் மொத்த வசூல் தற்போது ரூ. 46.84 கோடியாக உள்ளது. கமலின் முந்தைய வெளியீடான இந்தியன் 2 படத்தை விட தக் லைஃப் குறைவாகவே இருந்தது. இது முதல் வாரத்தில் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் பற்றி

தக் லைஃப் என்பது துரோகத்திற்குப் பிறகு பழிவாங்கத் துடிக்கும் ஒரு பயங்கரமான மாஃபியா தலைவனின் பல தசாப்த கால கதையைச் சுற்றி வருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அலி ஃபசல் மற்றும் ரோஹித் சரஃப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தக் லைஃப் வழக்கு

கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என கமல் ஹாசன் கூறியதற்கு கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தோடு இந்த கூற்றுக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி படத்தை அம்மாநிலத்தில் வெளியிடாமல் தடை விதித்ததனர். மேலும், கர்நாடக உயர்நீதிமன்றமும் கமலை மன்னிப்பு கோர வேண்டும் வலியுறுத்தியது. ஆனால், கமல் மன்னிப்பு கோர மறுத்துவிட்டார்.

கமலுக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த சமயத்தில், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல.. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்?என்று கேள்வி எழுப்பி கமலுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது.