தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 9 நாட்கள் ஆகியும் 50 கோடியை எட்டாத தக் லைஃப்.. இந்தியன் 2க்கே டஃப்!
தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல் : கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா கிருஷ்ணன் நடித்த திரைப்படம் கடந்த வாரம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் படம் இன்னும் 50 கோடி வசூலை ஈட்டவில்லை எனத் தெரிகிறது.

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 9 நாட்கள் ஆகியும் 50 கோடியை எட்டாத தக் லைஃப்.. இந்தியன் 2க்கே டஃப்!
தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: நாயகன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. இருப்பினும், படம் வெளியான சமயத்தில் இருந்த சர்ச்சைகளும் நெகட்டிவ் விமர்சனங்களும் தியேட்டர்களில் படம் ஓடுவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்வில்லை.
50 கோடியை தாண்டாத தக் லைஃப்
இந்த நிலையில், படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கணக்கிட்டு கூறும் Sacnilk.com எனும் இணையதள கருத்து படி, தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் முழுவதுமாக முடிந்த பின்னும், இன்னும் இந்தியாவில் ரூ. 50 கோடியைத் தாண்டவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளது.