தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: வார இறுதி நாளில் சரிந்த வசூல்.. 4 ஆம் நாளில் படக்குழுவை ஏமாற்றிய தக் லைஃப்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: வார இறுதி நாளில் சரிந்த வசூல்.. 4 ஆம் நாளில் படக்குழுவை ஏமாற்றிய தக் லைஃப்!

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: வார இறுதி நாளில் சரிந்த வசூல்.. 4 ஆம் நாளில் படக்குழுவை ஏமாற்றிய தக் லைஃப்!

Malavica Natarajan HT Tamil
Published Jun 09, 2025 09:38 AM IST

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியான 4 வது நாளில் வசூலில் சரிந்து ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: வார இறுதி நாளில் சரிந்த வசூல்.. 4 ஆம் நாளில் படக்குழுவை ஏமாற்றிய தக் லைஃப்!
தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: வார இறுதி நாளில் சரிந்த வசூல்.. 4 ஆம் நாளில் படக்குழுவை ஏமாற்றிய தக் லைஃப்!

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

மணி ரத்னத்தின் தக் லைஃப் திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் இந்தியாவில் ரூ. 15.5 கோடி வசூலித்தது. வெள்ளிக்கிழமை அன்று வசூல் கணிசமாக குறைந்து ரூ. 7.15 கோடியாக இருந்தது. சனிக்கிழமை வசூல் சற்று அதிகரித்து ரூ. 7.75 கோடியாக இருந்தது.

ஞாயிற்றுக் கிழமையான நேற்று, இந்தியாவில் சுமார் ரூ. 6.50 கோடி வசூலித்தது, இதன் மூலம் முதல் வார இறுதியில் படத்தின் மொத்த வசூல் ரூ. 36.90 கோடியாக இருந்தது. இந்த வசூல் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், மணிரத்னம் மற்றும் கமலின் திரைப்படம் என்பதால் இதைவிட அதிகமான வசூலை மக்களும் படக்குழுவினரும் எதிர்பார்த்தனர்.

வரும் நாட்களில் எப்படி வசூல்?

வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்காததால், வரும் வார நாட்களில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. முன்னதாக இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படமான இந்தியன் 2, தக் லைஃப் திரைப்படத்தை விட சிறப்பாக ரூ. 62.15 கோடி நான்கு நாட்களில் வசூலித்தது, மேலும் முதல் வார இறுதியில் ரூ. 59.15 கோடி வசூலித்தது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் I மற்றும் II திரைப்படங்கள் அந்த நேரத்தில் முறையே ரூ. 120.15 கோடி மற்றும் ரூ. 103.75 கோடி வசூல் செய்தன.

தக் லைஃப் படம்

தக் லைஃப் திரைப்படத்தில் கமல் சக்திவேல், அதாவது சக்தி என்ற கதாப்பாத்திரத்திலும், சிலம்பரசன் அவரது வளர்ப்பு மகன் அமர் ஆகவும் நடித்துள்ளனர். த்ரிஷா இந்திரா எனும் பெயரிலும் நடித்துள்ளார். மேலும் அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபசல், சன்யா மல்ஹோத்ரா மற்றும் ரோஹித் சரஃப் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கர்நாடகாவில் தடை

தக் லைஃப் என்பது கமல் மற்றும் மணி 1987-ல் வெளிவந்து வெற்றி பெற்ற நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாகும். மொழிப் பிரச்னை காரணமாக கர்நாடகாவில் படம் தடை செய்யப்பட்டதும் படத்தின் வசூலை பாதித்திருக்கலாம், ஏனெனில் ஆந்திரப் பிரதேசம்-தெலுங்கானாவைத் தவிர, தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல சந்தையாக கர்நாடகா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.