Thug Life: கமல் ரெடியாகுவாரா.. ரஷ்யா விற்கு பறக்க தயாராகும் தக் லைப் படக்குழு?
Thug Life Movie: தக் லைஃப் படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நடிகர் கமல் ஹாசனின் காட்சிகள் படமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படமான தக் லைப் என்கிற படத்தில் கமல் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தநிலையில், தக் லைப் படத்தை ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தக் லைஃப் படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நடிகர் கமல் ஹாசனின் காட்சிகள் படமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் பல முக்கியமான படங்களை இயக்கிய இயக்குநர். அஞ்சலி, ரோஜா, பாம்பே, நாயகன், தளபதி, அலைபாயுதே, குரு, ஓகே கண்மணி, ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர்.
இவரது சினிமாக்கள் பலவும் தமிழைத்தாண்டி இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன.
இந்நிலையில் நாயகன் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தின் பெயர், தக் லைஃப். இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் இணைத்து நடித்து வருகின்றனர்.
முன்னதாக மணிரத்னம் படங்களின் ஆஸ்தான ஹீரோயினான உலக அழகி ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இணைந்தால் இருவர், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் ஒன்று மற்று இரண்டு ஆகியப் படங்களைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் படத்தில் ஆறாவது முறையாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி, திரைத்துறையில் கமல்ஹாசனுடன் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் ஜோடி சேருவார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக பிரமாண்ட இயக்குநா் ஷங்கர் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய இந்தியன் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஃபாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது. படம் ரிலீஸான சில நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து புதிய சாதனைகளை படைத்துள்ளது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறாா். இதனால் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனா்.
லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாா். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியது. அதில், கமல்ஹாசன் கை கட்டிக்கொண்டு ஸ்டைலாக நிற்க, அவரை சுற்றி லைட்டிங் டீம் டெக்னீஷியன்கள் இருந்தனா்.
இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், படத்தை கோடை விடுமுறை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்