நாயகன் ஒப்பீடு.. கர்நாடக தடை.. ஓவர் புரோமோஷன்… வசூலின் தரைமட்டத்தில் தள்ளாடும் தக் லைஃப்!
தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3: 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் மணிரத்னம் மீண்டும் இணைந்த படம் நாயகனுடன் ஒப்பிடப்பட்டதால் மந்தமான விமர்சனங்களைப் பெற்றது.

தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த தக் லைஃப் திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் கடுமையான ட்ரோலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் வசூல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இவ்வளவுதான் வசூல்
தக் லைஃப் திரைப்படம் வெளியான அன்றைய தினம் ரூ .15.5 கோடியையும், வெள்ளிக்கிழமை ரூ .7.15 கோடியையும் வசூல் செய்தது. இதன் மூலம் இரண்டாம் நாள் வசூல் சரிவானது 53.87 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் தக் லைஃப் திரைப்படம் வெறும் ரூ .5.84 கோடியை மட்டுமே வசூல் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் தக் லைஃப் திரைப்படம் மொத்தமாக ரூ .28.49 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. தமிழை பொறுத்தவரை, தக் லைஃப் திரைப்படத்தை 35. 62 சதவீத மக்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். கமலும், மணிரத்னமும் நாயகன் படத்திற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு இந்தப்படத்தில் இணைந்த காரணத்தால், இந்தப்படத்தின் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.