Tamil Movies Rewind: ரஜினி, கமல்ஹாசன், விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள்.. ஏப்ரல் 10 ரிலீசான தமிழ் சினிமா லிஸ்ட்
2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை குறி வைத்து டாப் ஹீரோக்களின் பல படங்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள், கமல்ஹாசனின் இரண்டு படங்கள், விஜய்யின் ஹிட் படம் இந்த நாளில் வெளியாகியுள்ளன

ஏப்ரல் 10, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தமிழ் புத்தாண்டு விடுமுறையை கணக்கில் வைத்து பல டாப் ஹீரோக்களின் படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 10ஆம் தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்களான அருணாச்சலம், படையப்பா, உலகநாயகன் கமல்ஹாசனின் காதலா காதலா, ராஜபார்வை, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் வந்துள்ளன. இதில் கமலின் காதலா காதலா, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் படங்கள் ஒரே ஆண்டில் ஒரே நாளில் வெளியாகி நேருக்க நேர் மோதிக்கொண்டன். ஏப்ரல் 10 தமிழ் ரிலீஸ் படங்கள் பற்றி பிளாஷ்பேக்கை பார்க்காம்
படையப்பா
கே.எஸ். ரவிக்குமார் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் மசாலா படமாக 1999இல் வெளியான படம் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், தேவர் மகன் படத்தில் கமலுடன் வருவது போல், படையப்பா படத்தில் ரஜினியுடன் தோன்றியிருப்பார் சிவாஜி கணேசன்.
இந்த படம் உருவான காலகட்டத்தில் ரஜினி சினிமாவுக்கு முழுக்கு போடபோவதாகவும், இனி திரைப்படங்களில் நடிக்கபோவதில்லை எனவும் தகவல் பரவியது. ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் மிக பெரிய அளிவில் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள். ரஜினி படங்களுக்கு உண்டான காமெடி, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் இந்த படம் மொக ஹிட்டானது. பாட்ஷாவுக்கு பிறகு ரஜினி என்ற பெயரை சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வரும் படங்களில் ஒன்றாக படையப்பா உள்ளது
காதலா காதலா
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா, செளந்தர்யா, ரம்பா, வடிவேலு உள்பட பலர் நடித்து ரொமாண்டிக் காமெடி படமாக 1998இல் வந்த படம் காதலா காதலா. படத்தில் கிரேஸி மோகன் வசனங்கனங்கள் தொடக்க காட்சி முதல் கடைசி வரை வயிறு குலுங்க சிரிக்கும் விதமாக நகைச்சுவையுடன் அமைந்திருக்கும். விறுவிறுப்பான காட்சியமைப்புகளும், கிரேஸி மோகன் ட்ரேட் மார்க் காமெடியும் படத்தில் ஹைலைட்டாக அமைந்தன. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கொண்டாடும் படமாக இருந்த காதலா காதலா படத்தில் கார்த்திக் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு பின்னர் கமல் நடிப்பில் முழு நீள நகைச்சுவை படமாக அமைந்திருந்ததது காதலா காதலா
நினைத்தேன் வந்தாய்
கே. செல்வபாரதி இயக்கித்தில் விஜய், ரம்பா, தேவையான பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ரெமாண்டிக் படமாக 1998இல் வந்த படம் நினைத்தேன் வந்தாய். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சண்டாடி என்ற படத்தின் ரீமேக்காக இருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. \
தேவா இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர முக்கிய காரணமாக அமைந்தது. படத்தில் ஸ்பெக்ஸ் அணிந்து, மிகவும் ஸ்மார்ட்டான லுக்கில் படத்தில் விஜய் தோன்றியிருப்பார். காதலுக்கு மரியாதை படத்துக்கு பின் விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது நினைத்தேன் வந்தாய்.
அருணாச்சலம்
சுந்தர் சி - ரஜினிகாந்த் முதல் முறையாக கூட்டணி அமைத்து 1998இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அருணாச்சலம். இந்த படத்தில் தான் ரஜினிகாந்த் - செளந்தர்யா முதல் முறையாக ஜோடி சேர்ந்தனர். இதன் பின்னர் பின்னர் மீண்டும் படையப்பா படத்தில் இணைந்து நடித்தினர். படத்தில் ரம்பாவும் இன்னொரு ஹீரோயினாக நடித்திருப்பார். வில்லன்களாக ரகுவரன், நிழல்கள் ரவி, கிட்டி, வி.கே. ராமசாமி ஆகியோர் நடித்திருப்பார்கள்.முதல் முறையாக ரஜினி நடித்த இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருப்பார்.
படத்தின் முதல் பாதி விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் படத்தின் உல்டா போல் இருந்தாலும், இரண்டாம்பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை, ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அப்போது வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்த படம் வெளியான சமயத்தில் நிஜத்திலும் ரஜினிக்கு அரசியலில் பெரிய வாய்ஸ் இருந்தது. பக்கா மாஸ் மசாலா படமாக இருந்து வரும் அருணாச்சலம் தமிழ்நாடு அரசின் விருதை வென்றதோடு, ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உள்ளது
ராஜபார்வை
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1981இல் வெளியான படம் ராஜபார்வை. இது கமல்ஹாசனின் 100வது படமாகும். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியானது. இந்த படத்தில் தான் தோட்டா தரணி கலை இயக்குநராக அறிமுகமானார்.
படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும் பார்வையற்றவராக தோன்றிய கமலின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பட்டர்ப்ளைஸ் ஆர் ஃப்ரீ என்ற அமெரிக்க படத்தை தழுவி உருவாக்கப்பட்ட ராஜபார்வை படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது கிடைத்தது.
