Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!

Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!

Marimuthu M HT Tamil
Jan 10, 2025 02:59 PM IST

Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!

Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!
Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. அவர் தனது இறுதிப்படமான தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, த.வெ.க மாவட்டச் செயலாளர்களை நிரந்தரமாக நியமிப்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுகளை ஆலோசனைக் கூட்டங்களை புஸ்ஸி ஆனந்த் நடத்தினார்.

அதன்பின், இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் இறுதிசெய்யப்படவுள்ளனர். பின்னர், விஜய்யுடன் இவர்கள் தனி தனியாக சந்தித்துப் பேசவுள்ளனர். அதனால் இந்தக் கூட்டம் மிக முக்கியம் வாய்ந்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்துக்கு இணக்கமாக இல்லாதவர்களுக்கு அழைப்பு இல்லை!

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்துடன் இணக்கமாக இல்லாததால், 3 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகிகள் தனது ஆதரவாளராக இருக்க வேண்டுமெனவும் புஸ்ஸி ஆனந்த் நினைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி த.வெ.க தற்காலிக மாவட்டத் தலைவர் அஜிதாவுக்கு அழைப்பில்லை எனத் தெரிகிறது. மேலும், காஞ்சிபுரம் பொறுப்பாளர் நெப்போலியனுக்கு அழைப்பில்லை என அறியவருகிறது.

அதேபோல் திமுகவில் இருந்து பிரிந்து வந்த நாகை மாவட்ட நிர்வாகி சேகருக்கும் அழைப்புவிடுக்கவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அழைப்பு விடுக்கப்படாதவர்களும், பனையூர் அலுவலகத்துக்கு முன்பு குவிந்துள்ளனர். இதனால் அவர்களால் எதுவும் சர்ச்சை ஏற்பட்டுவிடக்கூடாது என அவர்களைக் கண்காணிக்க புஸ்ஸி ஆனந்த் சிலரை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் புஸ்ஸி ஆனந்த் தன்னை எதிர்த்தவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கதை:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பதுதான் தங்கள் இலக்கு என கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

தொடங்கிய மூன்றே நாட்களில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அக்டோபர் 27ஆம் தேதி நடிகர் விஜய் தனது கொள்கைத்தலைவர்களாக, வேலுநாச்சியார், பெரியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோரை அறிவித்தார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.