Serials TRP: டி.ஆர்.பியில் பெரும் சறுக்கல்.. இரண்டாம் இடத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serials Trp: டி.ஆர்.பியில் பெரும் சறுக்கல்.. இரண்டாம் இடத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே

Serials TRP: டி.ஆர்.பியில் பெரும் சறுக்கல்.. இரண்டாம் இடத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே

Aarthi Balaji HT Tamil
Published Jun 30, 2024 10:47 AM IST

Serials TRP: Serials TRP: டி.ஆர்.பியில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த சீரியல்கள் அனைத்து சன் தொலைக்காட்சியை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர்.பியில் பெரும் சறுக்கல்.. இரண்டாம் இடத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே
டி.ஆர்.பியில் பெரும் சறுக்கல்.. இரண்டாம் இடத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே

கயல்

சன் தொலைக்காட்சியில் இரவு 8. 30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் கயல் சுமக்கிறார்.

அவர் செய்யும் செயல்களுக்கு பல்வேறு தடைகளை ஏழுகிறது. அதை எல்லாம் தாண்டி பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. கயல் சீரியல், 8.28 புள்ளிகளுடன் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த வாரமும் கயல் சீரியல் இரண்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், 10.28 டிஆர்பி புள்ளிகள் பெற்றது.

சிங்கப்பெண்ணே

கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த பெண், குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஆனந்தி. வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த வார டிஆர்பியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் 8.74 டிஆர்பி புள்ளிகள் பெற்று உள்ளது. கடந்த வாரம் 11.3 டிஆர்பி புள்ளிகள் பெற்றது.

வானத்தை போல

சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. அண்ணன், தங்கை பாசத்தை அழகாக காண்பிக்கும் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பமான ஒன்று. பலரும் இந்த சீரியல் பார்த்த பிறகு நமக்கு இப்படி ஒரு அண்ணன், தங்கை இல்லையே என ஏங்கி இருக்கிறார்கள். டிஆர்பியில் 7. 89 புள்ளிகள் பெற்று வானத்தை போல சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மருமகள்

சன் தொலைக்காட்சியில் ஜூன் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர், மருமகள். கேப்ரியல்லா நாயகியாக நடித்து வருகிறார். கண்ணான கண்ணே சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ராகுல் ரவி நடிக்க உள்ளார். மருமகள் தொடர் 7.85 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

சுந்தரி

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சுந்தரி. இந்த வார டிஆர்பி 6 . 62 புள்ளிகள் பெற்று ரேட்டிங் லிஸ்டில் 5 வது இடத்தில் சுந்தரி இருக்கிறது. இரண்டு குட்டி பிள்ளைகளுடன் சுந்தரி செயல் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

டி.ஆர்.பியில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த சீரியல்கள் அனைத்து சன் தொலைக்காட்சியை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.