தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sreeleela In Tamil: 'விஜய் படத்தை இதனால் தான் ரிஜெக்ட் செய்தேன்' - அஜித் நாயகியான பின் தைரியமாக சொன்ன ஸ்ரீலீலா

Sreeleela In Tamil: 'விஜய் படத்தை இதனால் தான் ரிஜெக்ட் செய்தேன்' - அஜித் நாயகியான பின் தைரியமாக சொன்ன ஸ்ரீலீலா

Marimuthu M HT Tamil
May 02, 2024 03:12 PM IST

Sreeleela In Tamil: நடிகைஸ்ரீலீலா, நடிகர் விஜய் படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

'விஜய் படத்தை இதனால் தான் ரிஜெக்ட் செய்தேன்' - அஜித் நாயகியான பின் தைரியமாக சொன்ன ஸ்ரீலீலா
'விஜய் படத்தை இதனால் தான் ரிஜெக்ட் செய்தேன்' - அஜித் நாயகியான பின் தைரியமாக சொன்ன ஸ்ரீலீலா

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை ஸ்ரீலீலா இன்றைய 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னி எனலாம். அவருடைய உடலின் வடிவு, அவரது நடன அசைவுகள் பலரையும் ஈர்த்து தென்னிந்தியா முழுக்க பல ஸ்ரீலீலா ரசிகர்களை உருவாக்கியுள்ளது. 

மருத்துவம் பயின்ற நடிகை ஸ்ரீலீலா, 2019ஆம் ஆண்டு முதன்முதலாக ’கிஸ்’ என்னும் படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் ஸ்ரீலீலாவின் படங்களை பார்த்து இம்ப்ரஸ் ஆகி, ’கிஸ்’ படத்தில் நடிக்க வைத்துள்ளார். இப்படம் ஹிட்டானது. இருந்தாலும், மருத்துவம் பயின்று வந்ததால் நடிப்பில், அவரால் தொடர்ச்சியாக கவனம் செலுத்தவில்லை. பின், ஸ்ரீலீலா, கன்னடத்தில் முரளிகவுடாவுடன் சேர்ந்து ‘பாரதே’ என்னும் படத்தில் நடித்தார். 

மருத்துவம் இறுதியாண்டு படிக்கும்போது, நடிகை ஸ்ரீலீலா 'பெல்லி சண்டாடி’ எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற ’மதுரா நகரிலோர்’ என்னும் பாடலில் ஸ்ரீலீலா ஆடிய நடன அசைவுகள் பலரால் கவனிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில், கன்னட காதல் படமான ‘பை டூ லவ்’வில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்து இருந்தார். 

அதன்பின், தமாகா என்னும் தெலுங்கு படத்தில் ரவி தேஜாவுடன் நடித்து, முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார். அடுத்து ராம் பொத்தினேனி படத்தில், சேர்ந்து தெலுங்கு படமான ‘ஸ்கந்தாவில்’ நடித்தார். 

 பின் நடிகை ஸ்ரீலீலா, நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து பகவந்த் கேசரி என்னும் படத்தில் நடித்தார்.இப்படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்புப் பலரால் பாராட்டப்பட்டது. 

இதைத்தொடர்ந்து ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். 

பின்னர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் நடித்து வெளியான ’’குண்டூர் காரம்’’ திரைப்படம் வெகுமக்கள் பலரால் ரசிக்கப்பட்டது. இப்படத்தில் வரும் ‘குறிச்சி மாடத்துபெட்டி’ என்னும் பாடல், தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது ’உஸ்தாத் பகத்சிங்’ என்னும் படத்தில், தெலுங்கின் பவர் ஸ்டாரான ‘பவன் கல்யாண்’ உடன் நடித்து வருகிறார். 

அதன்பின் தமிழில் அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரீலீலா கமிட் ஆகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆகும்போதே முன்னணி நடிகையாக ஆகிறார், ஸ்ரீலீலா. 

இதற்கு முன்னதாக, நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் நடிக்க, ஸ்ரீலீலாவிடம் கேட்கப்பட்டுள்ளது. கதைக் கேட்டபின், தான், அவர் ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்காக அழைக்கப்பட்டார் எனத் தெரிந்திருக்கிறது, ஸ்ரீலீலாவுக்கு. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஸ்ரீலீலா, விஜய் படத்துக்கு ‘ நோ’ சொல்லிவிட்டாராம். 

மேலும் தனக்கு தமிழ் சினிமாவில் சரியான அறிமுகத்துக்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் தன்னை ஒரு படத்துக்கு நடிக்க வைக்க கேட்டுள்ளார்கள் என வருத்தம் தெரிவித்துள்ளார். இறுதியில் இந்த தகவல் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்புக்குழுவுக்குச் செல்ல, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்வது என முடிவுஎடுத்து, கதை சொல்லியிருக்கின்றனர். கதையும் பிடித்துப்போக, அஜித் குமாருடன் ஜோடி போடத் தயார் ஆகி வருகிறார், ஸ்ரீலீலா. இப்படத்திற்காக தமிழ் பயின்று வருகிறார். 

ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ’’குட் பேட் அக்லி’’ என்னும் படத்தை இயக்கவுள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால், அதனை முடித்துவிட்டு, 2024ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருக்கிறது.  இப்படத்தை அடுத்த ஆண்டு 2025ஆம் ஆண்டு, பொங்கலுக்கு வெளியிட தயாரிப்புக் குழுவினரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இப்படத்துக்கு ராக்ஸ்டார் தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்