Tamil News  /  Entertainment  /  This Is The Song Maya Sang In Bigg Boss Tamil Season 7 Grand Finale

BiggBoss Tamil Season 7 Grand Finale: கடைசியாக மாயா பாடிய பாடல் இதுதான்

Marimuthu M HT Tamil
Jan 14, 2024 07:31 PM IST

பிக்பாஸ் இறுதிப்போட்டியாளரான மாயா,அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் பாடிய பாடல் பலரது கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளது.

கடைசியாக மாயா பாடிய பாடல் இதுதான்
கடைசியாக மாயா பாடிய பாடல் இதுதான்

ட்ரெண்டிங் செய்திகள்

பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். 106 நாட்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவுசெய்தது. அப்படி, போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9:30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர். இதனை கோடிக்கணக்கான மக்கள் அனுதினமும் பார்த்துவருகின்றனர். அதனால் டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது.

இதில் இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மாயா, மணிசந்திரா ஆகியோர் உள்ளனர்.

சரியாக இன்று மாலை ஆறு மணிக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்கியது. பிக்பாஸ் சீசன் தமிழ் 7 கிராண்ட் ஃபினாலே நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக கானா பாலா மற்றும் நிக்‌ஷன் ஆகியோர் இணைந்து பாடினர்.

அப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கற்றதும் பெற்றதும் பற்றி பேசவேண்டும் என முன்னாள், இந்நாள் போட்டியாளர்களிடம் கேட்டார், கமல்ஹாசன். அவர்களும் அதைப் பேசினர். அதன்பின், கோக் ஸ்டூடியோ தமிழ் சீசன் 2 மியூசிக் பேண்ட்டை சார்ந்தவர்கள் வந்தனர். அதன்பின்,இறுதிப்போட்டியாளர்களுக்காக இசைவிருந்து செய்யப்பட்டது. அதாவது சிலர் பாடினர். அப்போது மாயா அங்கு பாட அழைக்கப்பட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய மாயா, பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற, ‘வா ரயில் விட போலாமா’ என்னும் பாடலைப் பாடினார். 

பின், அனைவரும் சேர்ந்து எத்தனை சந்தோஷம் என்னும் பாடலைப் பாடினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.