அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தாமதமாக இப்படி ஒரு காரணம் இருக்கா.. அஜித்துக்கு துணை முதல்வர் வாழ்த்து சொன்னதன் பின்னணி இதோ
இயக்குநர் மகிழ் திருமேனி இன்னும் இளமையாக காட்ட வேண்டும் என்று விரும்புகிறார். இந்த ஆசை காரணமாக VFX ல் அந்த காட்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித், திரிஷா இணைந்து நடித்த கிரீடம் படத்தில் ரொம்ப யெங்காக இருப்பது போல் விடாமுயற்சியில் நீங்கள் பார்க்கலாம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித்தின் கார் ரேஸ்க்கு பாராட்டியது, மற்றும் விடா முயற்சி அப்பேட் போன்ற கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் வி.கே சுந்தர் தனது V K Sundar Updates என்ற யூடியூப் சேனலில் பதில் அளித்துள்ளார். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
அஜித்தை வாழ்த்திய உதயநிதி
தளபதி விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அதனால் விஜய்யின் ரசிகர்கள் ஓட்டு விஜய்க்கு வந்து விடும். அதே சமயம் நடிகர் அஜித் ரசிகர்கள் எந்த பக்கம் போவார்கள் என்ற குழப்பம் இருக்கிறது. அனால் தான் உதய நிதி ஸ்டாலின் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி டுவீட் போட்டார். அதை அமைச்சர்கள் எல்லாம் ரீ டுவீட் செய்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அதில் சில கேள்விகள் உள்ளது. அஜித் கார் ரேஸ் போவதை இன்றுதான் புதிதாக பார்க்கிறார்களா என்ற கேள்வி உள்ளது.
ஆனால் அஜித்தின் கார் ரேஸ் போட்டோவில் நீங்கள் உன்னிப்பாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதில் ரேஸ் கிளப் போட்டோவில் தமிழ்நாடு மேப்பை வைத்துள்ளார். அவர் ஹெல்மெட்டில் இந்திய கொடி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பொதுவாக கார் ரேஸ், அல்லது ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ் போகும் போது எந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர் என்பதை குறிக்க வேண்டும். அதற்கு தான் இந்திய கொடி. எந்த ஸ்டேட்டில் இருந்து வருகிறோம் என்பதை குறிக்க தான் தமிழ்நாடு மேப் வைத்துள்ளார். இதற்கு தான் உதயநிதி வாழ்த்து சொல்லி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இதை அரசியலாக பார்க்க வேண்டிய தில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்க கூடும். ஆனால் அவர் முதன்மையாக வாழ்த்து சொன்னது இதற்காகதான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
விடாமுயற்சி அப்பேட்
இதைத்தொடர்ந்து விடாமுயற்சி அப்டேட் குறித்து விகே.சுந்தர் பேசி உள்ளார். விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு தான் வெளியாக 99 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் வர வாய்ப்பு இல்லை. விடாமுயற்சி படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் தான் ஆரம்பித்துள்ளது. படத்தில் அஜித், த்ரிஷா இருவரும் சேர்ந்த ஒரு லவ் போர்ஷன் பிளாஷ் பேக்கில் வருகிறது. அஜித் கருப்பு முடியுடன் வரும் ஒரு படம் செக்கெண்ட் லுக் போட்டோவில் வந்திருக்கும்.
அதில் அஜித் ரொம்ப இளமையாக இருப்பது போல் இருக்கும். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். இயக்குநர் மகிழ் திருமேனி இன்னும் இளமையாக காட்ட வேண்டும் என்று விரும்புகிறார். இந்த ஆசை காரணமாக VFX ல் அந்த காட்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித், திரிஷா இணைந்து நடித்த கிரீடம் படத்தில் ரொம்ப யெங்காக இருப்பது போல் விடாமுயற்சியில் நீங்கள் பார்க்கலாம். அது முழுக்க முழுக்க இங்கு இருக்கும் டெக்னீசியன்கள் மேனுவலாக செய்ய போகிறார்கள். அது இன்னும் எவ்வளவு காலம் எடுத்து கொள்ளும் என்பது தெரியவில்லை. அதனால் டப்பிங் வேலைகளும் VFX வேலைகளும் முடிந்தவுடம் படம் எப்போது படம் ரிலீஸ் ஆகும். டீசர் எப்போது வரும் என்பதையும் நாம் சொல்லி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்