Actor shyam on vijay: பூரி பொங்கல்.. இதுதான் விஜய் அண்ணன் டயட்.. ஷ்யாம் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Shyam On Vijay: பூரி பொங்கல்.. இதுதான் விஜய் அண்ணன் டயட்.. ஷ்யாம் பேட்டி!

Actor shyam on vijay: பூரி பொங்கல்.. இதுதான் விஜய் அண்ணன் டயட்.. ஷ்யாம் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2023 07:09 PM IST

நடிகர் விஜயின் இளமைக்கான ரகசியத்தை நடிகர் ஷ்யாம் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் ஷ்யாம்
நடிகர் ஷ்யாம்

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், இவர்களுடன் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் விஜயின் சகோதரர்களில் ஒருவராக நடித்துள்ளார் நடிகர் ஷ்யாம். அவருடைய நடிப்பும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் தற்போது வாரிசு படம் குறித்தும், விஜயுடன் பணியாற்றியது தொடர்பாகவும் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ““20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போன் பயன்படுத்தவே மாட்டார்.

அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார்; அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனை தூக்கி போட்டுவிட்டேன். விஜய் சாரிடம் பேசும்போது, எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள், இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால், தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன் என சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

 

 படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.” என்றார்

வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருந்த இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார். இந்தப்படத்தின் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.