'பாட்ஷா ரீமேக் பண்ணா?' - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்ன ‘நச்’ சாய்ஸ்; சும்மா அள்ளுதே!
பாட்ஷா படத்தின் ரீமேக் குறித்த ஒரு தகவல் பலரையும் குஷிப்படுத்தியுள்ளது.
பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வரலாற்றில் மைல்கல்லை எட்டிய படம், பாட்ஷா. ரஜினியில் மாஸான நடிப்பு, ஸ்டைல், டயலாக் டெலிவரி என அனைத்திற்கும் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்ட படம். இப்படம் 1995ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ் சரண் ராஜ், விஜயகுமார், யுவராணி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
முன்பெல்லாம், தீபாவளியை ஒட்டி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் படங்களில் பாட்ஷாவும் ஒன்று. அப்படி, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் எப்போதும் ஈர்க்கும் படமாக பாட்ஷா இருந்தது.
இந்நிலையில் இப்படம் ரீமேக் செய்யப்படுமா அல்லது இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்படுமா என படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அடிக்கடி கேட்டு வந்தனர், ரசிகர்கள்.
அதற்கு இந்த தீபாவளி நெருங்கும் வேளையில் பதிலளித்துள்ளார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. குறிப்பாக, ரஜினியை நினைத்து கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம் தான் பாட்ஷா என்றும்; அந்தப் படத்தை அவர் இல்லாமல் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், பாட்ஷாவை ரீமேக் செய்ய இனிவரும் காலங்களில் வாய்ப்புகள் இருப்பதாகவும், ஒரு வேளை அது அமைந்தால் அதற்கு அஜித் குமார் தான் சரியாகப் பொருந்திப் போவார் எனவும் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். படைப்பை உருவாக்கியவரிடமே அப்படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்ட தகவல், அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே, தேவர் மகன் படத்தை ரீமேக் செய்தாலோ அல்லது தேவர் மகன் படத்தின் பாகம் 2 படத்தை எடுத்தாலோ அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பேசிவரும் நிலையில், பாட்ஷா படத்தில் அஜித் வெர்ஷன் பற்றிய பேச்சு அடிபடத்தொடங்கிவிட்டது.
முன்னதாக நடிகர் அஜித், ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்து, அதை மீண்டும் ஹிட் படம் ஆக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்