தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  13 Years Of Aaranya Kaandam: எது தேவையோ அதுவே தர்மம்..! ரிலீஸ் போது ரசிகர்கள் கொண்டாட தவறிய கல்ட் கிளாசிக் படம்

13 years of Aaranya Kaandam: எது தேவையோ அதுவே தர்மம்..! ரிலீஸ் போது ரசிகர்கள் கொண்டாட தவறிய கல்ட் கிளாசிக் படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 10, 2024 07:15 AM IST

ரிலீசின்போது ரசிகர்கள் கொண்டாட தவறிய படமாக இருந்த ஆரண்ய காண்டம் பின்னாளில் சிறந்த கேங்ஸ்டர் படமாக கல்ட் கிளாசிக் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது.

ரிலீஸ் போது ரசிகர்கள் கொண்டாட தவறிய கல்ட் கிளாசிக் படம்
ரிலீஸ் போது ரசிகர்கள் கொண்டாட தவறிய கல்ட் கிளாசிக் படம்

ட்ரெண்டிங் செய்திகள்

எது தேவையோ அதுவே தர்மம்

போதை வஸ்துக்காக இரு கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் மோதல், கேங்ஸ்டர்களிடம் சிக்கிக்கொள்ளும் நான்கு பேர். இறுதியில் யார் தப்பித்தார்கள், யார் என்ன பலன் அடைந்தார்கள் என்பது தான் படத்தின் ஒன்லைன்.

பட டைட்டில் முடித்து காட்சி தொடங்கு வதற்கு முன் எது தர்மம் என்ற கேள்வி தோன்றும். இதையடுத்து கிளைமாக்ஸில் படம் முடிந்த பின்னர் எது தேவையோ அதுவே தர்மம் எனவும் முடித்திருப்பார்கள். இந்த கூற்றுப்படி படத்தின் இடம்பிடிக்கும் ஆறு கதாபாத்திரங்கள் தங்களுக்கான தேவையை நோக்கி பயனிப்பதும், அதை அவர்கள் அடைந்தார்களா என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்டியிருப்பார்கள்.

மூன்று விதமான கதைகளை ஒரே நேர்கோட்டில் கொண்டு வர வைத்து ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்த படமாக ஆரண்ய காண்டம் இருந்தது. தமிழ் வெளியான நியோ நாயர் பாணி திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது.

படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக சம்பத் குமார், ரவிகிருஷ்ணா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், நடிகை யாஸ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம், மாஸ்டர் வசந்த் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இதுதவிர சாய் தீனா, அஜய் ராஜ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரமாக வந்து போவார்கள்.

பின்னணி இசை மிரட்டல்

படத்தின் டைட்டிலில் பாடல்கள் என கவிஞர் வாலி, கங்கை அமரன் பெயர் தோன்றும். ஆனால் படத்தில் பாடல்கள் இடம்பெற்றிருக்காது. மாறாக காட்சிகளின் சூழலுக்கு ஏற்ப பின்னணியாக பல இடங்களில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கப்பட்டிருக்கும். படத்துக்கு இசையமைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருப்பார். சீரியஸாக செல்லும் படத்துக்கு யுவனின் இசை பார்வையாளர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.

குறிப்பாக் க்ளைமாக்ஸில் வரும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிக்கு யுவனின் மென்மையான பின்னணி இசை ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது. இதேபோல் படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம் என இன்ன பிற டெக்கின்கல் விஷயங்களும் தமிழ் சினிமாவில் பார்த்து பழகியதில் இருந்து மாறுபட்டு இருந்தது.

தெறிக்க விட்ட வசனங்கள்

படத்தின் சூழலுக்கு கதாபாத்திரங்கள் பேசு வசனங்கள் பஞ்ச் போல் அதிரவைக்கும் விதமாக அமைந்திருக்கும். "சப்பையும் ஒரு ஆம்பளதான் எல்லா ஆம்பளயும் சப்பை தான்", "Best part of being women is, its man world", "அப்பன்னா ரொம்ப பிடிக்குமா,அப்படியில்லை. ஆனா அவரு எங்கப்பா" போன்ற சில வசனங்கள் தெறிக்கவிடும் விதமாக இருந்தன.

பாக்ஸ் ஆபிஸ் தோல்வி

படம் வெளியானபோது பெரிதாக கண்டுக்கொள்ளப்படாமல், ரிலீசான தடமே தெரியாமல் போனது ஆரண்ய காண்டம். இந்த படம் பின்னாளில் ரசிகர்களின் பேசுபொருளாக ஆனதோடு, கல்ட் கிளாசிக் அந்தஸ்தையும் பெற்றது. படத்துக்கு உலக திரைப்பட விழாக்களில் கிடைத்த பாராட்டும், படத்துக்காக கிடைத்த விருதுகளும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற இந்த படம் மேலும் சில விருதுகளையு குவித்தது. ரிலீஸ் போது ரசிகர்கள் கொண்டாட தவறிய படமாக இருக்கும் ஆரண்ய காண்டம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்