VJ Siddhu: 'மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க’: ஏஜிஎஸ்ஸை புகழ்ந்து எஸ்.கே. புரொடக்ஷனை கலாய்த்த வி.ஜே.சித்து
VJ Siddhu: 'மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க’: ஏஜிஎஸ்ஸை புகழ்ந்து எஸ்.கே. புரொடக்ஷனை கலாய்த்த வி.ஜே.சித்து

VJ Siddhu: மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க என ஏஜிஎஸ் நிறுவனத்தை வி.ஜே.சித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
டிராகன் திரைப்படத்தின் பிரி-ரிலீஸ் நிகழ்ச்சியில், வி.ஜே.சித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவர் பேசிய வீடியோ வைரல் ஆகியிருக்கிறது. அதில், ‘’ரொம்ப ரொம்ப நன்றி முக்கியமா சொல்லணும்னா ரெண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒன்று, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட். அவங்கதான் வந்து இந்த வாய்ப்பை எனக்கும் ஹர்ஷத்துக்கும் கொடுத்தாங்க. பெரிய நன்றி. இன்னொருத்தர், அஸ்வத் ப்ரோ. அவங்க எனக்கு தெரிஞ்சு ஒரு 20 இன்டர்வியூ கொடுத்தாங்கன்னா அந்த 20 இன்டர்வியூலையும் இதை மறக்காம ரைம்ஸ் மாதிரி சொல்லிட்டாரு. அதாவது, 2 லட்சம் சப்ஸ்கிரைபர் இருக்கும்போதே நான் அவரை நடிக்க கூப்பிட்டேன்னு சொன்னார்.
இன்னும் சொல்லப்போனால் நம்ம சேனல் ஆரம்பிச்சு 11ஆவது சப்ஸ்கிரைபர் இந்த மனுஷன்தான். எங்களுக்கு அதனால என்னைக்குமே அதை நாங்க மறக்க மாட்டோம். முதல் தடவை இந்த படத்தின் கதையை சொல்றதுக்காக ஆபீஸ் கூப்பிட்டார். போய் உட்கார்ந்த உடனே என்னென்னமோ நிறைய பேசினார். ஆனால், எனக்கு ஒன்னுமே புரியல. நான் செலக்ட்டா அப்படின்னு கேட்டேன். செலக்ட்டட் தான் போ அப்படின்னாரு.
பாதி நேரங்கள்ல இங்கிலீஷ்ல மட்டும் தான் பேசிப்பாங்க: வி.ஜே. சித்து
போயி அடுத்த நாள் ஹர்ஷத்கானை கூட்டிட்டு வரச் சொன்னார். சரி நமக்கு தான் ஒன்னும் தெரியல. தமிழ் மீடியம்ல இருந்து வந்திருக்கோம். இவன் கொஞ்சம் நாலேட்ஜ் ஆன ஆள் தானே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிச்சவனாச்சேன்னு இவனை கூட்டிட்டு போறேன்.
இவன்கிட்டயும் அந்த மனுஷன் அப்படித்தான் பேசுறான். அவனுக்கும் ஒன்னும் புரியல அதுக்கப்புறம் நாங்களே பிக்ஸ் ஆயிட்டோம். சரி ஓகே, நாம ஒரு ஹாலிவுட் படத்துல நடிக்க போறோம். அடுத்து கேமராமேனும் அப்படி தான் பேசுறார். திடீர்னு மார்க்ல நில்லுடா அப்படின்னாரு. பாதி நேரங்கள்ல இவங்க ரெண்டு பேரும் இங்கிலீஷ்ல மட்டும் தான் பேசிப்பாங்க.
இதெல்லாம் நான் வந்து உண்மையிலேயே இந்த ஜாக்கி ஜான் படம் மேக்கிங்ல எல்லாம் கடைசியா போடுவாங்க இல்லையா, ஒரு கேமராமேனும் ஒரு டைரக்டரும் இங்கிலீஷ்ல பேசுறது. இதெல்லாம் நான் பார்க்கும்போது உண்மையிலேயே இவன்கிட்ட சொல்லுவேன் நிறைய பேசுறாங்கடா ஆனால், ஒன்னும் புரியலடான்பேன். சில நேரத்துல பிரதீப் ப்ரோவுக்கே அது பீதி ஆயிடும். பீதி ஆயிடுச்சுன்னா அவர் கொஞ்ச நேரத்துல அவர் என்ன பேசுறாருன்னு அவருக்கே புரியாது. அவருக்கு ஒரு மல்டி பெர்சனாலிட்டி இருக்குன்றத நான் கண்டுபிடிச்சிட்டேன். என்ன திடீர்னு ஒன்னு பேசுவாரு திட்டிடுவாரு; ஓகே.. டார்லிங் நல்லா பண்ணு அப்படின்னு போயிடுவாரு.
மேலும் படிக்க: வி.ஜே.சித்துவின் பேட்டி
மேலும்படிக்க: விஜே சித்துவின் ஆபாச பேட்டி
மேலும் படிக்க: ஏஜிஎஸ் தயாரித்த தி கோட் பட வசூல்
மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க: வி.ஜே.சித்து
இந்த படம் உண்மையிலேயே ஆரம்பிச்சது ஒரு மாதிரி ஜாலியாக ஆரம்பிச்சது. முடியும் போது ஏன்டா முடியுது அப்படின்னு இருந்தது. ஏனென்றால், மூணு வேளையும் நல்லா சோறு போட்டாங்க. சும்மா சொல்லக்கூடாது. டெய்லி கறிகஞ்சி அவ்வளவு ஹேப்பியா இருந்தது. நம்ம ஆபீஸ்ல அப்படி கிடையாது. சாப்பாட்டில் ஏஜிஎஸ்ஸை பார்த்து நாங்க பல தடவை வியந்திருக்கோம்.
இது சொல்லலாமான்னு தெரியல. இந்த படத்துல போடும்போது அஸ்வத் ப்ரோ வந்து ரீ-இன்ட்ரோடியூசிங் அப்படின்னு போட்டாரு. அதுக்கு முன்னாடி நாங்க ஒரு ரெண்டு படம் பண்ணோம். இட்லி கேட்டால் இட்லி இல்லைன்னுவாங்க தோசை கேட்டா வீட்ல இருந்து எடுத்துட்டு வரமாட்டியா அப்படிப்பாங்க. இந்த சூட்டில் சிக்கன் இருக்கு டார்லிங், மீன் இருக்கு டார்லிங் அப்படின்னு தருவாங்க. அதுக்கப்புறம் பிரதீப் ப்ரோக்கு டயட் ஃபுட்னு ஒன்னு எடுத்துட்டு வருவாங்க. ஆத்தாடி ஆத்தா.. அதுல என்னென்னமோ இருக்கும்.
ஓடுறது போடுறது பறக்குறது தாவுறது நிக்கிறது நீந்துறது எல்லாமே அவருக்கு இருந்துச்சு. ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் மட்டும் இப்போது வரைக்கும் இருக்கு இவ்வளவு திங்குறாரு இந்த மனுஷனுக்கு ஏன் உடம்பு மட்டும் விழுவ மாட்டேங்குது. அதுமட்டும் தான் ஃபீலிங். அவர் வந்து ஒரு மாதிரி பாதி நேரங்கள்ல எங்களுக்கு குருவா இருந்தார். பாதி நேரங்கள்ல நல்ல ஃபிரண்டா இருந்தாரு''எனத் தெரிவித்தார்.
வி.ஜே.சித்து விலாக்ஸ் மூலம் பிரபலமான யூடியூபர் வி.ஜே. சித்து, இதன் முன், டிரிப், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தான்முன்பு பணியாற்றிய படங்களில் சூட்டிங் ஸ்பாட்டில் இப்படி எல்லாம் சாப்பாடு கிடைத்தது இல்லை எனச் சொல்லியிருந்ததன்மூலம், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் நடித்த அனுபவத்தைக் கூறியதாகத் தெரிகிறது. இப்படத்தின் புரொடியூசர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சிவகார்த்தியேனை தாக்கிப் பேசினாரே வி.ஜே.சித்து எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்