Top Tamil Songs 2024: கட்சி சேர, தளபதி விஜய்யின் விசில் போடு..! அமேசான் மியூசிக்கில் டாப் லிஸ்டில் உள்ள தமிழ் பாடல்கள்
Top Tamil Songs: தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த டாப் பாடல்கள் பிரபல மியூசிக் தளங்கள் வரிசைபடுத்தியுள்ளன. அந்த வகையில் அமேசான் மியூசிக் தளத்தில் இன்று வரையில் டாப் லிஸ்டில் இருக்கும் தமிழ் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்
சினிமாக்களை காட்டிலும் சினிமா பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரக்கூடியதாக இருந்து வருகிறது. பட்டிதொட்டியெங்கும் அனைத்து தரப்பு வயதினரையும் கவரும் விஷயமாக பாடல்கள் உள்ளன. படங்கள் ரசிகர்களை கவராமல் போனாலும் அதில் இடம்பெறும் பாடல்கள் ஹிட்டாகி சோஷியல் மீடியாக்களில் வைரல் மெட்ரீயல்களாகவும் மாறி ட்ரெண்டாகிறது.
90ஸ் காலகட்டத்தில் ஹிட் பாடல்களை அடையாளம் காட்டும் விதமாக டாப் 10 பாடல்கள் என நிகழ்ச்சிகள் மூலம் அதை ஒளிபரப்பி ட்ரெண்டாக்கி வந்தனர். இன்றைய காலகட்டத்தில் அதே பாணியை சினிமா மட்டுமல்லாமல் பிற பாடல்களின் லைப்ரேரியாக திகழும் ஸ்பாட்டிபை, அமேசான் மியூசிக்கில், யூடியூப் மியூசிக் போன்ற தளங்கள் வரிசைப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், அமேசான் மியூசிக் தளத்தில் லேட்டஸ்டாக இருக்கும் டாப் 10 தமிழ் பாடல்களும் அவை இடம்பிடித்திருக்கும் படங்கள் எவை என்பதையும் பார்க்கலாம்
கட்சி சேர
மியூசிக் விடியோவாக வெளிவந்த இந்த பாடலுக்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஆதேஷ் கிருஷ்ணா பாடல் வரிகள் எழுதியுள்ளார். பாடலில் சம்யுக்தா விஸ்வநாதனின் நடனம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்ததோடு அவரது ஐகானிக் ஸ்டெப்பில் ரீல்ஸ்களும் வெளியிட்டு தெறிக்கவிட்டனர். இன்று வரையிலும் அமேசான் ப்ரைமில் இந்த பாடல் டாப் லிஸ்டில் உள்ளது.
விசில் போடு
தளபதி விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தி கோட் படத்தின் முதல் சிங்கிளாக வெளியான பாடல் விசில் போடு. இதில் விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடனமாடியுள்ளனர். தற்போது லிரிக் விடியோ வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள்.
தி கோட் படத்தில் பார்டி பாடலாக வரும் விசில் போடு பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளனர்.
பாரா
இந்தியன் 2 படத்தில் இடம்பிடித்திருக்கும் தேசப்பற்று பாடலாக பாரா உள்ளது. பா. விஜய் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் மற்றும் ஸ்ருதிகா சாமுத்ரலா பாடியிருக்கும் இந்த பாடல் இந்தியன் 3 படத்தில் விடியோவாக வரவுள்ளது.
தேன்சுடரே
மணிகண்டன் - ஸ்ரீகெளரி பிரியா இணைந்து நடித்த ரெமாண்டிக் படமான லவ்வர் படத்தில் இடம்பிடித்திருக்கும் தேன்சுடரே என்ற பாடல் கடந்த 5 மாதங்களில் இருந்து இன்று வரை டாப் 10 லிஸ்டில் உள்ளது. மோகன் ராஜன் பாடல் வரிகள் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பாடலை ஷான் ரோல்டன், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர்
கூலி டிஸ்கோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் டிராக் மியூசிக்காக கூலி டிஸ்கோ வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வரிகள் இல்லாமல் மியூசிக் தீம் ஆகவும், இளையராஜாவின் கிளாசிக் ஹிட் பாடலின் மியூசிக்கும் இடம்பிடித்திருக்கும் இந்த கூலி டிஸ்கோ பாடலை அனிருத் இசையமைத்துள்ளார்.
அச்சச்சோ
சுந்தர் சி இயக்கத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக படம் முடிந்தவுடன் கிளைமாக்ஸாக தமன்னா - ராஷிகண்ணா குத்தாட்டத்துடன் தோன்றிய பாடல் அச்சச்சோ அச்சச்சோ பாடல். விக்னேஷ் ஸ்ரீகாந்த் பாடல் வரிகள் எழுத ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். பாடலை கரேஸ்மா ரவிச்சந்திரன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பாடியுள்ளனர்.
ஏ புள்ள
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லால் சலாம் படத்தில் இடம்பிடித்த ஏ புள்ள பாடலுக்கு கபிலன் பால் வரிகள் எழுத, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். படம் பெரிய வரவேற்பை பெற்வில்லை என்றாலும், இந்த பாடல் ரசிகர்கள் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது
லியோ தாஸ் என்ட்ரி
லேகோஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் தெறிக்கவிட்டது. அனிருத் இசையமைப்பில் மியூசிக்காக இருக்கும் லியோ தாஸ் என்ட்ரி சுமார் 10 மாதங்களுக்கு மேல் இன்று வரையிலும் அமேசான் ப்ரைம் டாப் 10 லிஸ்டில் உள்ளது.
புஷ்பா புஷ்பா
அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 படத்தில் இடம்பிடித்திருக்கும் புஷ்பா புஷ்பா பாடல் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. விவேகா பாடல் வரிகள் எழுத தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நகாஷ் அஜீஸ், தீபக் ப்ளூ ஆகியோர் பாடியிருக்கும் இந்த பாடல் அதிகம்பேரால் ரசிக்கப்படும் பாடலாக உள்ளது.
ஜலாலி
லால் சலாம் படத்தில் இடம்பிடித்திருக்கும் ஜலாலி, அமேசான் மியூசிக் டாஸ் லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக உள்ளது. மஷூக் ரஹ்மான், ஏ ஆர் ரஹ்மான் பாடல் வரிகள் எழுத, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சரத் சந்தோஷ் ஆகியோர் இணைந்து பாடலை பாடியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/