Top Tamil Songs: ரசிகர்களை கவர்ந்த டாப் பாடல்கள்..ஸ்பாட்டிபை தளத்தின் டாப் தமிழ் பாடல்களின் லிஸ்ட் இதோ
Top Tamil Songs: தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த டாப் பாடல்கள் பிரபல மியூசிக் தளங்கள் வரிசைபடுத்தியுள்ளன. அந்த வகையில் ஸ்பாட்டிவை தளத்தில் இருக்கும் டாப் தமிழ் பாடல்களின் லிஸ்ட் எவை என்பதை பார்க்கலாம்
சினிமாக்களை காட்டிலும் சினிமா பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரக்கூடியதாக இருந்து வருகிறது. பட்டிதொட்டியெங்கும் அனைத்து தரப்பு வயதினரையும் கவரும் விஷயமாக பாடல்கள் உள்ளன. படங்கள் ரசிகர்களை கவராமல் போனாலும் அதில் இடம்பெறும் பாடல்கள் ஹிட்டாகி சோஷியல் மீடியாக்களில் வைரல் மெட்ரீயல்களாகவும் மாறி ட்ரெண்டாகிறது.
90ஸ் காலகட்டத்தில் ஹிட் பாடல்களை அடையாளம் காட்டும் விதமாக டாப் 10 பாடல்கள் என நிகழ்ச்சிகள் மூலம் அதை ஒளிபரப்பி ட்ரெண்டாக்கி வந்தனர். இன்றைய காலகட்டத்தில் அதே பாணியை சினிமா மட்டுமல்லால் பிற பாடல்களின் லைப்ரேரியாக திகழும் ஸ்பாட்டிபை, அமேசான் மியூசில், யூடியூப் மியூசிக் போன்ற தளங்கள் வரிசைப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் லேட்டஸ்டாக இருக்கும் டாப் 10 தமிழ் பாடல்களும் அவை இடம்பிடித்திருக்கும் படங்கள் எவை என்பதையும் பார்க்கலாம்
கதரல்ஸ்
இந்தியன் 2 படம் அட்டர் பிளாப் ஆனாலும் அனிருத் இசையில் அமைந்திருக்கும் தாத்தா வராரு என்ற கதரல்ஸ் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார்.
சின்ன சின்ன கண்கள்
தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கோட் படத்தில் இந்த பாடல் இடம்பிடித்துள்ளது. கபிலன் வைரமுத்து பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா, மறைந்த பாடகி பவதாரணி ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்.
ஆசை கூட
சர்ப்ரைசாக மூன்றாவது இடத்தில் சினிமா பாடல் இல்லாமல் ஆசை கூட என்ற மியூசிக் பாடல் இடம்பிடித்துள்ளது. சாய் அப்யங்கர், ஸ்டார் படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கும் இந்த பாடலை சத்யன் இளங்கே எழுத கட்சி சேர என்ற ஹிட் பாடலை இசையமைத்த சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
கல்கி 2898ஏடி தீம்
பிரபாஸ் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய கல்கி 2898 ஏடி படத்தில் இடம்பிடித்திருக்கும் கல்கி தீம் அடுத்த இடத்தில் உள்ளது. விவேகா பாடல் வரிகளுக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருப்பார். அனந்து, கெளதம் பரத்வாஜ் மற்றும் கோரஸ் பாடலை பாடியிருப்பார்கள்
வாட்டர் பாக்கெட்
ஆடியோ ரிலீஸில் இருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பாடலாக ராயன் படத்தில் இடம்பெறும் வாட்டர் பாக்கெட் பாடல் உள்ளது. படத்தின் ரிலீஸுக்கு பின்னரும் மவுசு குறையாமல் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது. கானா காதர் பாடல் வரிகள் எழுத ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சந்தோஷ் நாரயணன், ஷ்வேதா மேனன் ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்
புஜ்ஜி தீம்
கல்கி 2898 ஏடி படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு தீம் மியூசிக்காக இருந்து வரும் புஜ்ஜி தீம் டாப் ப்ளே லிஸ்டில் இருக்கிறது. ஜப்னா கோல்ட் எழுதிய இந்த தீம் பாடலை பிரியா ரகு பாடியுள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். 46 விநாடிகள் ஓடக்கூடிய தீம் மியூசிக்காக இருந்தாலும் இதை அதிகம் பேர் கேட்டு மகிழ்கிறார்கள்.
ஸ்டார் இன் தி மேக்கிங்
இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஸ்டார். இதில் யுவன்ஷங்கர் ராஜா பாடி, இசையமைத்த கனவே என தொடங்கும் ஸ்டார் இன் தி மேக்கிங் பாடல் டாப் லிஸ்டில் உள்ளது. இந்த பாடலின் வரிகளை இயக்குநர் இளன் எழுதியுள்ளார்.
கம்பேக் இந்தியன்
இந்தியன் 2 படத்தில் இருந்து மற்றொரு பாடலாக அனிருத் இசையமைப்பில் கம்பேக் இந்தியன் என பாடல் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. அறிவு பாடல் வரிகள் எழுத இந்த பாடலையும் அனிருத் பாடியுள்ளார். இந்தியன் 2 படத்துக்கு மிக பெரிய ப்ரோமோஷனாகவே இந்த பாடல் அமைந்திருந்தது.
பியர் பாடல் தேவாரா
ஜூனியர் என்டிர் நடிப்பில் உருவாகும் புதிய படம் தேவாரா. இந்த படத்தின் மூலம் பாலிவுட் இளம் நாயகி ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பிடித்திருக்கும் பியர் சாங் இந்த லிஸ்டில் பத்தாவது இடத்தில் உள்ளது. விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுத அனிருத் பாடியுள்ளார். கொரட்லா சிவா இயக்கத்தில் தேவாரா படம் பகுதி 1 பிரமாண்டமாக உருவாகி வருகிறது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/