செம ட்விஸ்ட்.. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்களாம்.. கடைசி இடத்தில் இருந்த ரயான் இப்போ டாப்!
தீபக், ஜாக்குலின், ரயான், ராணவ், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் தற்போது வரைக்குமான வாக்குகளின் அடிப்படையில் தீபக் முதலிடத்தில் இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
எஞ்சி உள்ள 10 போட்டியாளர்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் மூன்று வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா,ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஜெஃப்ரி, அன்ஷிதா வெளியேற்றப்பட்டனர்.