ஒரே ஒரு இந்திய நடிகர் தான்.. 21ஆம் நூற்றாண்டின் சிறந்த நடிகர்.. உங்களால் அவர் யார் என கணிக்க முடிகிறதா?
தி இன்டிபென்டன்ட் பத்திரிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 60 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
தி இன்டிபென்டன்ட் பத்திரிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 60 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
ஆனால், அந்த நபர் ஷாருக்கான், அமீர்கான், அமிதாப் பச்சன் அல்லது தீபிகா படுகோன் அல்ல. கன்னட நடிகர்களான யஷ், ரிஷப் ஷெட்டியும் அல்ல. புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கூட அல்ல.
பெருமையைப் பெற்ற அந்த ஒரே நடிகர் யார்?
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரேயொரு நடிகர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் வெளியானது ஒரு படத்திற்காக அந்த நடிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 60 சிறந்த நடிகர்களில் இடம்பிடித்தவர் இர்ஃபான் கான். இந்தப் பட்டியலில் இர்ஃபான் கான் 41வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான் 2020 ஆம் ஆண்டில் தனது 53வது வயதில் காலமானார். 1980களில் இருந்து 2000களின் முற்பகுதி வரை திரைப்படத் துறையில் கடுமையாகப் போராடினார். ஆனால், 2001 ஆம் ஆண்டில் ஆசிஃப் கபாடியா இயக்கிய தி வாரியர் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். நடிகரின் சொந்த மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு போர்வீரனாக இர்ஃபானின் நடிப்பு அற்புதமாக இருந்தது என்று தி இன்டிபென்டன்ட் பாராட்டியுள்ளது.
மக்களை கவர்ந்த கதையின் நாயகன்
இதன் பிறகு பல படங்களில் இர்ஃபான் கான் தனது கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நடித்துள்ளார். திக்மான்ஷு துலியாவின் 2003 ஆம் ஆண்டு குற்ற நாடகமான ஹாசில், 2003 ஆம் ஆண்டு வெளியான விஷால் பரத்வாஜின்கேங்க்ஸ்டர் நாடக படமான மக்பூல் மற்றும் 2006 ஆம் ஆண்டு வெளியான மீரா நாயரின் காதல் நாடகமான தி நேம்சேக் ஆகியவற்றில் இர்ஃபானின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
லைஃப் இன் எ மெட்ரோ, தி டார்ஜிலிங் லிமிடெட், ஸ்லம்டாக் மில்லியனர், பான் சிங் தோமர், லைஃப் ஆஃப் பை, தி லஞ்ச்பாக்ஸ், கிஸ்ஸா, ஹைதர், பீக்கு, தல்வார், ஹிந்தி மீடியம், தி சாங் ஆஃப் ஸ்கார்பியன்ஸ், கரீப் கரீப் சிங்கிள், கார்வான் போன்ற படங்களிலும் இர்ஃபான் நடித்து மக்கள் மனங்களை வென்றார்.
பட்டியலில் இடம்பிடித்த முதல் 10 நடிகர்கள்
தி இன்டிபென்டன்ட் பத்திரிகையின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 60 நடிகர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த கலைஞர்கள் யார் என்பதை அறிந்து கொள்வோம். 2014 ஆம் ஆண்டில் 46 வயதில் காலமான நடிகர் பிலிப் சீமோர் ஹாஃப்மேன் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது இடத்தை எம்மா ஸ்டோன் பிடித்துள்ளார். க்ரேஸி, ஸ்டுபிட், லவ், லா லா லேண்ட், தி ஃபேவரிட் மற்றும் பூர் திங்ஸ் ஆகிய படங்களில் அவர் அற்புதமாக நடித்துள்ளார் என்று தி இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற டேனியல் டே-லூயிஸ் "ஓய்வு பெற்று மீண்டும் நடிக்க" மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ரிட்லி ஸ்காட்டின் தி கிளாடியேட்டர் II படத்தில் நடித்ததற்காக டென்சல் வாஷிங்டன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களை அடுத்து நிக்கோல் கிட்மேன், டேனியல் கலுயா, சாங் காங் ஹோ, கேட் பிளாஞ்செட், காலின் ஃபாரெல் மற்றும் ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து முதல் 10 சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
டாபிக்ஸ்